Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

பரீட்சை பெறுபேறுகளை வெளியிட முயற்சி செய்வது பெற்றோர் மத்தியில் வெறுப்பை வளர்ப்பதற்காகவே!

T

The Leader Desk

செப்டம்பர் 13, 2021 • 4:42 PM

பரீட்சை பெறுபேறுகளை வெளியிட முயற்சி செய்வது பெற்றோர் மத்தியில் வெறுப்பை வளர்ப்பதற்காகவே!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆசிரியர்களின் பணி பகிஷ்கரிப்பு காரணமாக நுண்ணியல் பாடங்களில் நடைமுறை பரீட்சைகளை மேற்கொள்ள முடியாமலுள்ளதாக பெற்றோர்களுக்கு உணர்த்தும் கைங்கரியத்தில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
  • சுமார் 169,000 மாணவர்கள் தோற்றியுள்ள நுண்ணியல் பாடங்களின் பெறுபேறுகள் இல்லாமல் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதானது, மாணவர்களுக்கு அநீதி இழைப்பதாக இருக்மென்பதே ஆசிரியர்களினதும் பெற்றோர்களினதும் மற்றும் மேலும் சில தரப்பினரதும் பொதுக் கருத்தாக உள்ளது.
  • நுண்ணியல் பாடங்களுக்கான நடைமுறை பரீட்சைகள் நடத்தாமல் 2020 க.பொ.த.
எழுத்து அளவு:

ஆசிரியர்களின் பணி பகிஷ்கரிப்பு காரணமாக நுண்ணியல் பாடங்களில் நடைமுறை பரீட்சைகளை மேற்கொள்ள முடியாமலுள்ளதாக பெற்றோர்களுக்கு உணர்த்தும் கைங்கரியத்தில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. ஆனால், கோரோனா பரம்பல் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருப்பதே இதற்குக் காரணம். சுமார் 169,000 மாணவர்கள் தோற்றியுள்ள நுண்ணியல் பாடங்களின் பெறுபேறுகள் இல்லாமல் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதானது, மாணவர்களுக்கு அநீதி இழைப்பதாக இருக்மென்பதே ஆசிரியர்களினதும் பெற்றோர்களினதும் மற்றும் மேலும் சில தரப்பினரதும் பொதுக் கருத்தாக உள்ளது.

நுண்ணியல் பாடங்களுக்கான நடைமுறை பரீட்சைகள் நடத்தாமல் 2020 க.பொ.த. பரீட்சை முடிவுகளை வெளியிட அரசாங்கம் முன்வரும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கையில் இறங்க நேரிடுமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறுகிறார்.

ஆசிரியர்களின் பணி பகிஷ்கரிப்பு தொடர்பில் முறையான தீர்வு என்ற வகையில், அரசாங்கம் நியமித்த ‘பபோதினி’ கமிட்டியின் அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்துவதில் அரசாங்கத்தின் எந்தக் கருத்தும் வெளிப்படவில்லையெனக் கூறும் ஒன்றிணைந்த ஆசிரியர் சேவைகள் சங்கம், கோரிக்கைகள் சம்பந்தமாக நடைமுறை சாத்தியமான தீர்வின்றி, போராட்டத்தைக் கைவிட தயாரில்லையென வலியுறுத்தியுள்ளது.

சங்கத்தின் பிரதான செயலாளர் சஞ்சீவ பண்டார சமூக வலைத்தளங்கள் ஊடாக கூறுகையில், 4 அமைச்சர்களை கொண்டு 24 வருடங்களாக ஆசிரியர்களை ஏமாற்றிய அதே பாதையில் தரமற்ற வாக்குறுதிகளை வழங்குவதாகக் கூறியதோடு, ஒட்டுமொத்த ஆசிரியர் போராட்டத்தையும் சம்பளக் கோரிக்கைக்குள் சுருக்கிவிட்டு ஏனைய கோரிக்கைகளை புறந்தள்ளியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பரீட்சை பெறுபேறுகளை வெளியிட முயற்சி செய்வது பெற்றோர் மத்தியில் வெறுப்பை வளர்ப்பதற்காகவே! | Tamil Leader | We Lead the Nation