Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

கப்ரால் இன்று ராஜினாமா செய்கிறார் கெட்டகொட மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகிறார்!

T

The Leader Desk

செப்டம்பர் 13, 2021 • 9:09 AM

கப்ரால் இன்று ராஜினாமா செய்கிறார்  கெட்டகொட மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகிறார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்நிலையில் அஜித் நிவர்ட் கப்ரால் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும் நியமிக்கப்படுவார் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • அத்துடன் இவ் வார இறுதியில் இலங்கை மத்திய வங்கியின் 16 வது ஆளுநராக அஜித் நிவர்ட் கப்ரால் பொறுப்பேற்கவுள்ளார்.
  • இந்த நிலையில் அஜித் நிவர்ட் கப்ரால் இராஜினாமா செய்ததை அடுத்து வெற்றிடமாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக ஜயந்த கெட்டகொடவை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முடிவு செய்துள்ளது.
  • கடந்த 2000 ஆம் ஆண்டில் முதன்முறையாக கொழுப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியதுடன் பின்னர், நாடாளுமன்றத்தை கலைக்கப்பட்டதை அடுத்து 2001 இல் மீண்டும் அவர் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
எழுத்து அளவு:

இந்நிலையில் அஜித் நிவர்ட் கப்ரால் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும் நியமிக்கப்படுவார் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி கப்ரால் தனது இராஜினாமா கடிதத்தை நாடாளுமன்ற பொதுச்செயலாளரிடம் இன்று பிற்பகல் ஒப்படைக்கவுள்ளார்.

அத்துடன் இவ் வார இறுதியில் இலங்கை மத்திய வங்கியின் 16 வது ஆளுநராக அஜித் நிவர்ட் கப்ரால் பொறுப்பேற்கவுள்ளார். இந்த நிலையில் அஜித் நிவர்ட் கப்ரால் இராஜினாமா செய்ததை அடுத்து வெற்றிடமாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக ஜயந்த கெட்டகொடவை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முடிவு செய்துள்ளது.

கடந்த 2000 ஆம் ஆண்டில் முதன்முறையாக கொழுப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியதுடன் பின்னர், நாடாளுமன்றத்தை கலைக்கப்பட்டதை அடுத்து 2001 இல் மீண்டும் அவர் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

இதனை அடுத்து 2011 ஆம் ஆண்டில் அவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்ததுடன், 2020 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக நாடாளுமன்றத்துக்கு ஜயந்த கெடகொட தெரிவு செய்யப்பட்டார்.

தொடர்ந்து  கடந்த மாதம் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தேசியப்பட்டியில் ஊடாக நாடாளுமன்றத்துக்கு நுழைவதற்கு வழி வகுக்கும் வகையில் ஜயந்த கெடகொட இராஜினாமா செய்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...