Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

பலி வாங்கும் நோக்கத்துடன் சிறையிலடைத்த கோஷிலா ஹன்ஸமாலிக்கு கொரோனா!

T

The Leader Desk

செப்டம்பர் 13, 2021 • 4:19 AM

பலி வாங்கும் நோக்கத்துடன் சிறையிலடைத்த கோஷிலா ஹன்ஸமாலிக்கு கொரோனா!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதற்கு முன்பு கிடைத்த செய்திகளின்படி, இந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்து 3 பேருக்கு கொவிட் தொற்றியிருந்தமை தெரியவந்தது.
  • சிறைப்படுத்தப்பட்டிருந்த 5 எதிர்ப்பாளர்களுக்கு ரபிட் அன்டிஜன் பரிசோதனை செய்த போது அவர்களுக்கு கொவிட் தொற்றியிருக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதனால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
  • ஆனால், தடுப்புக் காவலில் இருந்த சமீர கொஸ்வத்த, வசந்த முதலிகே மற்றும் அமில சந்தீப ஆகியோருக்கு கொவிட் தொற்றியிருப்பது கடந்த ஒகஸ்ட் 26ம் திகதி தெரியவந்துள்ளது.
  • இதன்படி இவர்கள் தடுப்புக் காவலில் இருந்த போது கோவிட் தொற்றியிருப்பது தெளிவாகிறது.
எழுத்து அளவு:

இலவச் கல்விக்கான மாணவர் மக்கள் இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு நடவடிக்கையின் பின்னர், பொய் குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட் அவ்வியக்கத்தின் செயற்பாட்டாளர்களில் ஒருவரான கோஷிலா ஹன்ஸமாலி பெரேரெ என்பவரே சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.

இதற்கு முன்பு கிடைத்த செய்திகளின்படி, இந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்து 3 பேருக்கு கொவிட் தொற்றியிருந்தமை தெரியவந்தது. சிறைப்படுத்தப்பட்டிருந்த 5 எதிர்ப்பாளர்களுக்கு ரபிட் அன்டிஜன் பரிசோதனை செய்த போது அவர்களுக்கு கொவிட் தொற்றியிருக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதனால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

ஆனால், தடுப்புக் காவலில் இருந்த சமீர கொஸ்வத்த, வசந்த முதலிகே மற்றும் அமில சந்தீப ஆகியோருக்கு கொவிட் தொற்றியிருப்பது கடந்த ஒகஸ்ட் 26ம் திகதி தெரியவந்துள்ளது. இதன்படி இவர்கள் தடுப்புக் காவலில் இருந்த போது கோவிட் தொற்றியிருப்பது தெளிவாகிறது.

ஓகஸ்ட் 03ம் திகதி பத்தரமுல்ல, பாராளுமன்ற சந்திக்கு அருகில் நடைபெற்ற மாணவர் மக்கள் இயக்கத்தின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த அவ்வியக்கத்தின் கோஷிலா ஹன்ஸமாலி, மு.சோ.கட்சியின் நிர்வாகச் செயலாளர் சமீர கொஸ்வத்த ஆகியோர் அன்றிரவே கைது செய்யப்பட்டனர்.

பல்கலைக் கழக விரிவுரையாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றுக் கொண்டிருந்த இலங்கை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் அமில் சந்தீப ஒகஸ்ட் 5ம் திகதி அடையாளம் தெரியாத சிலரால் கடத்தப்பட்டார். தொலைக்காட்சி விவாதமொன்றில் பங்கேற்றுவிட்டு ஒகஸ்ட் 6ம் திகதி அதிகாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்த அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே கைது செய்யப்பட்டார். அதோடு, ஒகஸ்ட் 13 திகதி ரஜரட்ட பல்கலைக் கழக மாணவரான ஹேஷான் ஹர்ஷனவும் கைது செய்யப்பட்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பலி வாங்கும் நோக்கத்துடன் சிறையிலடைத்த கோஷிலா ஹன்ஸமாலிக்கு கொரோனா! | Tamil Leader | We Lead the Nation