Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

திருகோணமலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டவர்களை மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

T

The Leader Desk

செப்டம்பர் 11, 2021 • 9:58 AM

திருகோணமலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டவர்களை மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த ஊடக சந்திப்பு இன்று(11) திருகோணமலை நகரில் இடம்பெற்றது.
  • அத்துடன் மனித உரிமைகள் பேவையின் 48வது மகாநாடு இம்மாதம் 13ம் திகதி இடம்பெறவுள்ளதுடன் இதில் முதல் விடயமாக இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான விடயம் பேசப்படவுள்மையும் குறிப்பிடத்தக்கதாகும்.
எழுத்து அளவு:

இந்த ஊடக சந்திப்பு இன்று(11)  திருகோணமலை நகரில் இடம்பெற்றது. அதில் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மேலும் தெரிவித்ததாவது:

எமது பிள்ளைகளுக்கும் பயங்கரவாத அமைப்பாக அரசாங்கம் கூறும் தரப்பினருக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது அவர்களுடைய வயதுக்கு இலங்கையில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்றதே அவர்களுக்கு தெரியாது இருப்பினும் சமூக வலைத்தளங்களில் அதன் பின்விளைவுகள் பற்றி அறியாமல் தவறுதலாக சில பதிவுகளை பதிவிட்டிருந்தார்கள் அது தவறுதான் அந்த தவறை மன்னித்து விடுதலை செய்ய அதிமேதகு  ஜனாதிபதி அவர்கள் ஆவண செய்ய வேண்டும் எனவும் எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகளை அவர்கள் செய்யமாட்டார்கள் எனவும் மன்றாட்டமாக கேட்டுக் கொண்டார்கள்.

இவர்கள் தொடர்பாக வழக்குகள் இடம்பெற்று வரும் நிலையில் அதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை அவர்களுடைய உழைப்பில்தான் எங்களுடைய வாழ்வாதாரம் சென்றது இப்போது நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றோம் எனவே எங்களுடைய குடும்ப நிலையை கருத்தில் கொண்டு அவர்களை பிணையிலாவது விடுதலை செய்ய வேண்டும் எனவும் மேலும் தெரிவித்தனர்

சமூக வலைத்தளங்களில் பயங்கரவாதத்துடன் தெடர்புடைய புகைப்படங்களையும், செய்திகளையும் பகிர்ந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் திருகோணமலையில் சில இளைஞர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த வருடமும் இவ்வருட ஆரம்பத்திலும் கைது செய்யப்பட்டிருந்தார்கள் இவர்களுடைய வழக்குகள் மூதூர் மற்றும் திருகோணமலை நீதி மன்றங்களிலும் இடம்பெற்றுவருகின்றது. அத்துடன் மனித உரிமைகள் பேவையின் 48வது மகாநாடு இம்மாதம் 13ம் திகதி இடம்பெறவுள்ளதுடன் இதில் முதல் விடயமாக இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான விடயம் பேசப்படவுள்மையும் குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...