Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

இரு தரப்பும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்ட கருத்தில் எமக்கு உடன்பாடில்லை! சிறிதரன்

T

The Leader Desk

செப்டம்பர் 10, 2021 • 3:55 PM

இரு தரப்பும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்ட கருத்தில் எமக்கு உடன்பாடில்லை! சிறிதரன் 

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் இருந்து இரண்டாவது கடிதம் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.
  • இந்த மாதம் 3ஆம் திகதி சுமந்திரனால் ஒரு கடிதம் அனுப்பப்பட்டது.
  • கடிதம் அனுப்பி விட்ட பின்னர் நாம் ஒன்றும் செய்ய முடியாது.
  • கடந்த 19ஆம் திகதிக்கு முன்னர் மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டியது, 7ஆம் திகதிக்கு பின்னர் அனுப்புவதில் பயனில்லையென்பதால் அதை கைவிட்டோம்.
எழுத்து அளவு:

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் இருந்து இரண்டாவது கடிதம் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. எனினும் அப்படியொரு நடவடிக்கையே நடக்கவில்லையென சில தரப்புக்கள் அடித்து சொன்னதுடன், கையொப்பமிட்டவர்கள் அதை மறுத்ததாகவும் செய்தி வெளியிட்டன.

அத்துடன் இன்று யாழில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய எம்.ஏ.சுமந்திரன், கையெழுத்திட்ட பலர் தாம் கையெழுத்திடவில்லையென மறுத்ததாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்தை போலியாக பயன்படுத்துவது குற்றவியல் நடவடிக்கை எனவும் கூறிய அவர் , இந்த விடயத்தில் சட்டநடவடிக்கையெடுக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே , இன்று கிளிநொச்சியில் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், கடிதம் தயாரிக்கப்பட்டு கையெழுத்து பெறப்பட்டது உண்மை என்றும் எனினும், அதை அனுப்பவில்லையெனவும் கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பின் பேச்சாளர் குருசாமி சுரேன் கடிதமொன்று அனுப்பியிருந்தார். அதன் தமிழ் மொழிபெயர்ப்பை அனுப்புமாறு கேட்டேன். கூகிள் ட்ரான்சிலேட் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பை அனுப்பியிருந்தார். அதில் நாம் கையொப்பமிடவில்லை என்பதுடன் அந்த கடிதம் அனுப்புவது குறித்து கட்சிகளிற்குள் கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை.

இந்த மாதம் 3ஆம் திகதி சுமந்திரனால் ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தில் இரு தரப்பும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்ட கருத்தில் எமக்கு உடன்பாடில்லை. அது பற்றி நாங்கள் ஆராயவேண்டும். காரணம் ஒரு தரப்பு களத்தில் இல்லை. மற்றைய தரப்பான அரசு இந்த நாட்டினுடைய இறைமையுள்ள அரசை நடத்துகின்ற ஒரு அரசாங்கம் தன் குடிமக்கள் மீது போர் குற்றத்தை நடத்தியுள்ளது.

குண்டுகளை வீசி மக்களை படுகொலை செய்திருக்கிறது. பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையில் மக்களை அழைத்து அதற்குள் குண்டு போட்டுக்கொலை செய்துள்ளது. ஒரு இன அழிப்பு. அது பற்றி கடந்த திங்கட்கிழமை , கட்சியின் உயர்மட்டகுழுவின் இணைய வழி கலந்துரையாடல் கடந்த திங்கள்கிழமை நடந்தது. இதைபற்றி ஆராய்ந்த போது, “ஐயா ஒரு தனி ஆளாக கையொப்பமிட்டு அனுப்பி விட்டார்“ என்றார்.

கடிதம் அனுப்பி விட்ட பின்னர் நாம் ஒன்றும் செய்ய முடியாது. அவர் எங்களை கேட்கவில்லை. ஆனால் கூட்டமைப்பின் தலைவர் என அவர் அனுப்பியதை யாரும் கேள்விகேட்க முடியாது. அந்த சூம் சந்திப்பில், கடிதம் அனுப்பப்பட்டு விட்டதாகவே சுமந்திரன் தெரிவித்தார்.

நான், சாள்ஸ் நிர்மலநாதன், த.கலையரசன், மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மட்டக்களப்பு மேயர் உள்ளிட்டவர்கள் ஒரு கடிதத்தை தயாரித்திருந்தோம். ஆனால் அந்த கடிதம் அனுப்பப்படவில்லை. அதற்குரிய இணைப்பை நான் தான் செய்தேன்.

இலத்திரனியல் முறைப்படிதான் கையொப்பத்தையும் பெற்றோம். கடந்த 19ஆம் திகதிக்கு முன்னர் மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டியது, 7ஆம் திகதிக்கு பின்னர் அனுப்புவதில் பயனில்லையென்பதால் அதை கைவிட்டோம். நாம் இந்த கடிதத்தை அனுப்பவுமில்லை. வெளியிடவுமில்லை. இதில் ஒரு சில காரணங்களை கருதி, முரண்பாடுகள் அதிகரிக்கக்கூடாது என்பதற்காகவும் இதைப்பற்றி அதிகம் பேசவில்லை.

அதில் முக்கியமான விடயம், பல கடிதங்கள் இங்கிருந்து அனுப்பப்பட காரணம், எமது கட்சிக்குள் இது பற்றி எப்போதோ கலந்துரையாடப்பட்டிருக்க வேண்டும். கடந்த மே மாதம் 17ஆம் திகதி 14 விடயங்களை குறிப்பிட்டு கடிதம் எழுதியிருந்தேன்.

அதில் 2வது விடயமாக ஜெனீவா விடயத்தையே எழுதியிருந்தேன். அதை பார்த்து விட்டு சம்பந்தன் ஐயா தொலைபேசியில் பேசினார். மாவை சேனாதிராசாவும் பேசினார். ஆனாலும் இதை பற்றி பலமுறை கேட்டும் கலந்துரையாடப்படவில்லையெனவும் சிறிதரன் இதன்போது மேலும் தெரிவித்தார். 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...