Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

எதிர்ப்பு தெரிவிக்கும் ஆசிரியர்களின் தகவல் சேகரிப்பு ஆரம்பம்!

T

The Leader Desk

செப்டம்பர் 10, 2021 • 12:55 PM

எதிர்ப்பு தெரிவிக்கும் ஆசிரியர்களின் தகவல் சேகரிப்பு ஆரம்பம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆசிரியர் - அதிபர் சேவைகளில் உள்ள சம்பள முரண்பாடுகளை நீக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து, அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்து சுமார் இரண்டு மாதங்கள் கடந்துள்ளன.
  • கொரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதை அரசாங்கம் தாமதப்படுத்துவதாக ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
எழுத்து அளவு:

ஆசிரியர் - அதிபர் சேவைகளில் உள்ள சம்பள முரண்பாடுகளை நீக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து, அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்து சுமார்  இரண்டு மாதங்கள் கடந்துள்ளன.

கொரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக  போராட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதை அரசாங்கம் தாமதப்படுத்துவதாக ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் போராட்டம் காரணமாக கொரோனா தொற்றுக்குள்ளான ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்துவற்காக,  காவல்துறையினரைப் பயன்படுத்தி ஆசிரியர்களையும் அதிபர்களையும் அச்சுறுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சி கவலையளிப்பதாக ஆசிரியர் சங்கத் தலைவர்களான ஜோசப் ஸ்டாலின் மற்றும் மஹிந்த ஜெயசிங்க ஆகியோர் கையொப்பமிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு உண்மைகளை வெளிக்கொண்டுவரும் வகையில்  ஒரு அறிக்கையை பெறுவதற்கான அழைப்பு” என்ற தலைப்பில் ஹொரணை, இங்கிரிய, மதுரவல மற்றும் மில்லனிய ஆகிய பிரதேச செயலாளர்களுக்கு, ஹொரணை தலைமையகத்தின் காவல்துறை பரிசோதகரால் செப்டெம்பர் 4 ஆம் திகதி ஒரு கடிதத்தை அனுப்பி, ஜூலை 25 மற்றும் ஒகஸ்ட் 5 ஆகிய திகதிகளில் நடைபெற்ற கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடைபெற்ற இடங்கள், பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை, மற்றும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்த எண்ணிக்கை தொடர்பிலான தகவல்கள் கோரப்பட்டுள்ளன.

04.08.2021 அன்று ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் வாகன அணிவகுப்பில் பங்கேற்று திரும்பிக்கொண்டிருந்த 44 ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கொழும்பு துறைமுக காவல்துறையினரால் கட்டாயமாக கைது செய்யப்பட்டதோடு, அன்டிஜன் சோதனைகளை நடத்தி  அவர்களில் கொரோனா தொற்றாளர்களை கண்டறிய முயற்சித்ததாக சுட்டிக்காட்டியுள்ள ஆசிரியர் அதிபர்கள், போராட்டங்களில் பங்கேற்ற 25 ஆசிரியர்கள் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன செப்டெம்பர் 07ஆம் திகதி  நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தவறான கருத்தும்,  அரசாங்க சார்பு 'சிலுமின' பத்திரிகையில்,  அரசு சார்பு பொது கல்வி ஊழியர் சங்கத்தின் தலைவர் வசந்த ஹந்தபான்கொடவை மேற்கோள்காட்டி வெளியான பொய்யான செய்தியும், கொரோனா கொத்தணி உருவாகியதாக காட்டும் முயற்சியே” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

ஆசிரியர் கொத்தணியை உருவாக்க முயற்சிக்காமல் ஆசிரியர்-அதிபர் சம்பளப் பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வைக் கண்டறியுமாறு, கொரோனா பரவுவலைத் தடுக்க முடியாத அரசாங்கத்திடம்,  ஆசிரியர் சங்கங்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...