Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

மோசடி செய்யப்பட்ட பணத்தை அறவிட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்! புபுது ஜயகொட

T

The Leader Desk

செப்டம்பர் 9, 2021 • 10:14 AM

மோசடி செய்யப்பட்ட பணத்தை அறவிட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்! புபுது ஜயகொட

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சட்டமூலத்தின்படி, பதுக்கி வைத்துள்ள சொத்துக்கள் அல்லது செலுத்தப்படாத வரிப்பணத்தை எங்காவது முதலீடு செய்வதாயிருந்தால் அதற்கு 1 சதவீத வரி செலுத்தப்பட வேண்டுமென இந்த சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் புபுது ஜயகொட கூறினால்.
  • இப்படியான விடயங்கள் உலகின் ஏனைய நாடுகளிலும் நடப்பதால் இது ஒரு முதலீடாகுமென கடந்த 07ம் திகதி பாராளுமன்றத்தில் பெஸில் ராஜபக்ஷ கூறியிருந்தார்.
  • இந்த சட்டமூலத்தின் ஊடாக பெரு நிறுவனங்களுக்கும் பெரும் பணக்காரர்களுக்கும் வரிச் சலுகை வழங்கி சாமானிய மக்களை கஷ்டத்தில் தள்ளப் போகிறார்கள்.
  • ஏற்கனவே 2015லிருந்து 2019 வரை கடந்த 5 வருட காலத்தில் 41415 கோடி வரிப் பணம் அரசாங்கத்திற்கு கிடைக்கவில்லையென கணக்காய்வாளர்நாயகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

சட்டமூலத்தின்படி, பதுக்கி வைத்துள்ள சொத்துக்கள் அல்லது செலுத்தப்படாத வரிப்பணத்தை எங்காவது முதலீடு செய்வதாயிருந்தால் அதற்கு 1 சதவீத வரி செலுத்தப்பட வேண்டுமென இந்த சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் புபுது ஜயகொட கூறினால். அவர் மேலும் கூறுகையில்,

“இந்த ஒரு சதவீதம் என்பது லஞ்சம் கொடுப்பதைப் போன்றதாகும். ஏனைய வரிகளுக்கு பெயர் சூட்டுவதைப் போல இந்த வரிக்கும் பெயர் சூட்டுவதாயிருந்தால் லஞ்ச வரி என்றே பெயர் சூட்ட வேண்டும். இது லஞ்சம். இது சம்பந்தமாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணையத்திடம் முறைப்பாடு செய்ய வேண்டும். சட்டத்திற்கு முரணாக பதுக்கி வைத்துள்ள பணம் மற்றும் சொத்துக்களை சட்டபூர்வமாக்குவதற்காக அவற்றின் மதிப்பில் ஒரு சதவீத லஞ்சத்தை அரசாங்கம் அறவிடும்.

இப்படியான விடயங்கள் உலகின் ஏனைய நாடுகளிலும் நடப்பதால் இது ஒரு முதலீடாகுமென கடந்த 07ம் திகதி பாராளுமன்றத்தில் பெஸில் ராஜபக்ஷ கூறியிருந்தார். நிதி அமைச்சர் சொல்வதைப் போல இது ஒருபோதும் முதலீடாக இருக்க முடியாது. இந்த சட்டமூலத்தின் ஊடாக பெரு நிறுவனங்களுக்கும் பெரும் பணக்காரர்களுக்கும் வரிச் சலுகை வழங்கி சாமானிய மக்களை கஷ்டத்தில் தள்ளப் போகிறார்கள்.

ஏற்கனவே 2015லிருந்து 2019 வரை கடந்த 5 வருட காலத்தில் 41415 கோடி வரிப் பணம் அரசாங்கத்திற்கு கிடைக்கவில்லையென கணக்காய்வாளர்நாயகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். 2020ல் 10500 கோடி வரி அரசாங்கத்திற்கு கிடைக்கவில்லையென கோப் கமிட்டி கூறுகிறது. கடந்த 6 வருடங்களில் மாத்திரம் 50000 கோடிக்கும் மேற்பட்ட வரிப்பணம் அரசாங்கத்திற்கு வஞ்சிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் இந்த மோசடியை செய்திருக்கின்றன. அவற்றின் சொத்துக்களை சரியாகக் காட்டமலேயே இந்த மோசடியை செய்துள்ளன.

மோசடி செய்யப்பட்ட பணத்தை அறவிட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். ஆனால், மோசடி செய்தவர்களின் பணத்தை சட்டபூர்வமாக்க, கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற புதிய சட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன” எனவும் கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...