Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

ரஷ்ய மந்திரி யெவ்ஜெனி ஜினிச்சேவ் காலமானார்!

T

The Leader Desk

செப்டம்பர் 8, 2021 • 4:15 PM

ரஷ்ய மந்திரி யெவ்ஜெனி ஜினிச்சேவ் காலமானார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ரஷ்ய அவசர சூழ்நிலைகளுக்கான மந்திரி யெவ்ஜெனி ஜினிச்சேவ் (வயது 55), ஆர்க்டிக் பகுதியில் சிவில் பாதுகாப்பு மற்றும் இராணுவ பயிற்சியின்போது திடீரென மரணமடைந்தார் என்று ரஷ்ய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
  • மேலும், இந்த சம்பவத்தின்போது பலர் அங்கு இருந்திருந்தாலும் என்ன நடந்ததென்று யாருக்கும் தெளிவாக தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்.
  • அந்த அறிக்கையில், 'ஆர்க்டிக் மண்டலத்தை அவசரக்காலத்தில் பாதுகாக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஆபத்தில் சிக்கிய ஒருவரை காப்பாற்றும் முயற்சியில் ஜினிச்சேவ் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்'' என்று குறிப்பிட்டிருக்கிறது.
எழுத்து அளவு:

ரஷ்ய அவசர சூழ்நிலைகளுக்கான மந்திரி யெவ்ஜெனி ஜினிச்சேவ் (வயது 55), ஆர்க்டிக் பகுதியில் சிவில் பாதுகாப்பு மற்றும் இராணுவ பயிற்சியின்போது திடீரென மரணமடைந்தார் என்று ரஷ்ய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

 'ஆர்க்டிக் மண்டலத்தை அவசரக்காலத்தில் பாதுகாக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஆபத்தில் சிக்கிய ஒருவரை காப்பாற்றும் முயற்சியில் ஜினிச்சேவ் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்'' என்று குறிப்பிட்டிருக்கிறது.

அரசின் உதவியுடன் இயங்கும் ஆர்.டி செய்தியின் தலைமை ஆசிரியர் மார்கரிட்டா சிமோன்யான் கூறுகையில், தவறி தண்ணீரில் விழுந்த கேமராமேனை காப்பாற்றும் முயற்சியில் ஜினிச்சேவ் உயிரிழந்ததாகத் தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த சம்பவத்தின்போது பலர் அங்கு இருந்திருந்தாலும் என்ன நடந்ததென்று யாருக்கும் தெளிவாக தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து ஆர்.பி.சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

பாறையின் உச்சியிலிருந்து ஒரு கேமரா மேன் தவறிவிழுந்தபோது அவரை காப்பாற்றும் முயற்சியில் ஜினிச்சேவ்வும் தவறிவிழுந்ததாகவும், இதில் இருவருமே உயிரிழந்துவிட்டதாக கூறியிருக்கிறது. மேலும், ஜினிச்சேவ் ரஷ்ய அதிபர் புதினின் தனிப்பட்ட பாதுகாப்பு விவரங்களையும் அறிந்தவர் என கூறப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...