Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

அரசாங்கம் சர்வதேசத்திற்கு சென்றால் நானும் சர்வதேசத்திற்கு செல்வேன்! கர்தினால் மெல்கம் ரஞ்ஜித்

T

The Leader Desk

செப்டம்பர் 8, 2021 • 1:42 PM

அரசாங்கம் சர்வதேசத்திற்கு சென்றால் நானும் சர்வதேசத்திற்கு செல்வேன்! கர்தினால் மெல்கம் ரஞ்ஜித்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலங்கை அரசாங்கம் ஈஸ்டர் தாக்குதல் பற்றிய உண்மையை மூடிமறைக்கவும் சர்வதேசத்தின் கவனத்தை திசைத்திருப்பவுமே இந்த முயற்சியை செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.
  • இரண்டு வருடங்களாக நீதியைக் கேட்டு நிற்கின்றோம்.
  • இந்தப் பயணத்திற்கு எமது நாட்டு மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தி செல்வதன் நோக்கம் என்ன?
எழுத்து அளவு:

இலங்கை அரசாங்கம் ஈஸ்டர் தாக்குதல் பற்றிய உண்மையை மூடிமறைக்கவும் சர்வதேசத்தின் கவனத்தை திசைத்திருப்பவுமே இந்த முயற்சியை செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் இத்தாலியின் பொலொன்ஞா பல்கலைக்கழகத்தில் நடைபெறுகின்ற ஐரோப்பிய மாநாட்டில் பங்கேற்றதன் பின்னர் புனித பாப்பரசரை சந்தித்து, உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் பல விடயங்கள் பற்றிய விசாரணையின் முன்னேற்றம் பற்றி விளக்கப்படுத்தவுள்ளார்கள் என்று கூறப்படுகின்றது. இந்தப் பயணத்திற்கு எமது நாட்டு மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தி செல்வதன் நோக்கம் என்ன? இந்த முயற்சியை நான் முற்றாக கண்டிக்கின்றேன் என்றும் உண்மையை மூடிமறைக்கவே அவர்கள் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

அத்துடன் பாப்பரசர் மற்றும் சர்வதேச நாடுகளுக்கு பொய்யுரைக்கவே இவர்கள் முயற்சிக்கின்றனர். உண்மையை மூடிமறைக்கின்ற மற்றுமொரு துரும்புவாக அரசாங்கம் இதனை கையாள்கின்றது. மக்களுக்காக முன்நின்று நாங்கள் நீதியையே கேட்டோம்.

இரண்டு வருடங்களாக நீதியைக் கேட்டு நிற்கின்றோம். அரசாங்கமே முதலில் சர்வதேசத்தை நாடுகின்றது. ஆகவே அதற்கு முன்னர் நாங்கள் எமது நிலைப்பாட்டினை சர்வதேசத்திடம் கூறிவிட்டோம். இந்த அரசாங்கம் ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை மூடிமறைப்பதுடன், மக்களுக்குப் நீதியை பெற்றுக்கொடுக்கப் பின்னடிக்கிறது என்பதையும் தெரிவிக்கின்றோம்.

ஜனாதிபதிக்கு அனைத்து விடயத்தையும் தெரிவித்து ஜுலை மாதத்தில் கடிதமொன்றை அனுப்பய போதிலும் பிரச்சினையை மூடிமறைக்கின்ற பதிலைத்தான் அவர் வழங்கினார்.

எனவே அரசாங்கம் சர்வதேசத்திற்கு செல்வதாயின் நானும் சர்வதேசத்திற்கு ஏட்டிக்குப் போட்டியாக செல்வேன் என்றும் பேராயர் கர்தினால் மெல்க்கம் ரஞ்ஜித் ஆண்டகை இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அரசாங்கம் சர்வதேசத்திற்கு சென்றால் நானும் சர்வதேசத்திற்கு செல்வேன்! கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் | Tamil Leader | We Lead the Nation