Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

அரசியல் நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும்! மு.சோ.கட்சி

T

The Leader Desk

செப்டம்பர் 7, 2021 • 3:36 PM

அரசியல் நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும்! மு.சோ.கட்சி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் குறித்துரைக்கப்பட்டவாறு அரசியல் கட்சியொன்று தனது கருத்தை மக்களிடன் எடுத்துச் செல்லவும், அரசாங்கத்தை விமர்சிக்கவும் சட்ட ரீதியான தடைகள் கிடையாது.
  • முன்னிலை சோஷலிஸக் கட்சி ஒகஸ்ட் 16ம் திகதி ஆணையத்திடம் எழுத்து மூலம் முன்வைத்த முறைப்பாடு சம்பந்தமாக பொலிஸ் மாஅதிபருக்கு செப்டம்பர் 3ம் திகதி அனுப்பியுள்ள கடிதத்தில் இது சம்பந்தமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • ‘ஒரு நபர்; நடைமுறையிலுள்ள சட்டத்தை மீறி செயற்பட்டிருந்தால், அது சம்பந்தமாக நடைமுறையிலுள்ள சட்டத்தின் ஒதுக்கீடுகளின் பிரகாரம் செயற்படும் பொறுப்பு பொலிஸ{க்கு உண்டு.
எழுத்து அளவு:

இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் குறித்துரைக்கப்பட்டவாறு அரசியல் கட்சியொன்று தனது கருத்தை மக்களிடன் எடுத்துச் செல்லவும், அரசாங்கத்தை விமர்சிக்கவும் சட்ட ரீதியான தடைகள் கிடையாது. முன்னிலை சோஷலிஸக் கட்சி ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்திடம் செய்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை ஆராயும் போது ஜனநாயகம் சம்பந்தமாக பாரதூரமான நிலை ஏற்பட்டிருப்பதாக பொலிஸ் மாஅதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு தேர்தல் ஆணையம் சுட்டிக் காட்டியுள்ளது.

முன்னிலை சோஷலிஸக் கட்சி ஒகஸ்ட் 16ம் திகதி ஆணையத்திடம் எழுத்து மூலம் முன்வைத்த முறைப்பாடு சம்பந்தமாக பொலிஸ் மாஅதிபருக்கு செப்டம்பர் 3ம் திகதி அனுப்பியுள்ள கடிதத்தில் இது சம்பந்தமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

‘ஒரு நபர்; நடைமுறையிலுள்ள சட்டத்தை மீறி செயற்பட்டிருந்தால், அது சம்பந்தமாக நடைமுறையிலுள்ள சட்டத்தின் ஒதுக்கீடுகளின் பிரகாரம் செயற்படும் பொறுப்பு பொலிஸ{க்கு உண்டு. என்றாலும், அப்படி செயற்படும்போது, சட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு செயற்பட வேண்டும் என்பதுடன், சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்துவதற்கு பொலிஸூக்கோ, அரச அதிகாரிக்கோ உரிமை இல்லை எனவும் வலுக்கட்டாயம் அல்லது அச்சுறுத்தல் செய்தல் அல்லது சட்டத்திற்குப் புறம்பாக கைது செய்யதலோ கூடாது’ என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மு.சோ.க. தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தை பொலிஸ் மாஅதிபரின் கவனத்திற்கு அனுப்பியுள்ள தேர்தல் ஆணையம், அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் சம்பந்தமாக துரிதமாக விசாரணை செய்து சட்டத்திற்குப் புறம்பான சம்பவங்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அப்படியான சம்பவங்களோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பந்தமாக தகுதியான நடவடிக்கை எடுக்குமாறும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையாளருக்காக தேர்தல் ஆணையத்தின் செயலாளர் எம்.எச.டீ.டி. ஹேரத் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...