Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

தொற்று நோயால் உயிரிழக்கும் சுகாதார ஊழியர்களின் சம்பளத்தை தொடர்ந்து வழங்க கோரிக்கை!

T

The Leader Desk

செப்டம்பர் 6, 2021 • 1:22 PM

தொற்று நோயால் உயிரிழக்கும் சுகாதார ஊழியர்களின் சம்பளத்தை தொடர்ந்து வழங்க கோரிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த 28 காவல்துறை அதிகாரிகளின் சம்பளத்தை அவர்களின் குடும்பங்களுக்கு தொடர்ந்து வழங்குவது குறித்த அமைச்சரவை பத்திரத்தை தயாரிக்குமாறு, செப்டெம்பர் 2 ஆம் திகதி, அமைச்சின் செயலாளருக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
எழுத்து அளவு:

சுமார் 6,000 சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், அரச தாதி உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது. 

கொடிய தொற்றுநோயை எதிர்கொள்ளும் ஒரு முன் வரிசை குழுவாக, சுகாதார ஊழியர்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து இருந்தபோதிலும் தொடர்ந்து பணியாற்றுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தீவிரமான தொற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்த காவல்துறை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு தொடர்ந்து அவர்களின் ஊதியத்தை வழங்குவது குறித்து அமைச்சரவைப் பத்திரத்தை தாக்கல் செய்யும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் தீர்மானம், சரியான நேரத்தில் எடுக்கப்பட்டது என  அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்ரிய குறிப்பிட்டுள்ளார். 

தொற்றுநோயால் உயிரிழக்கும் சுகாதார ஊழியர்களுக்கும் இதைச் செய்யுமாறு தொழிற்சங்கத் தலைவர் சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

"சேவையில் இருக்கும்போது கொரோனா நோயால் உயிரிழக்கும் சுகாதார ஊழியர்களின் சம்பளத்தை  அவர்களின் பதவிக்காலம் நிறைவடையும் வரை, அவர்களது குடும்பங்களுக்கு வழங்கும் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்து நியாயத்தை பெற்றுக்கொடுக்குமாறு  நான் கேட்டுக்கொள்கிறேன்."

28 காவல்துறையினர்

சிறீலங்கா காவல்துறையின் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில், 28 காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக  பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த 28 காவல்துறை அதிகாரிகளின் சம்பளத்தை அவர்களின் குடும்பங்களுக்கு தொடர்ந்து வழங்குவது குறித்த அமைச்சரவை பத்திரத்தை தயாரிக்குமாறு, செப்டெம்பர் 2 ஆம் திகதி, அமைச்சின் செயலாளருக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...