Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

சிறைச்சாலைகளின் கொள்ளளவுக்கு மேல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை மனித உரிமைகளை மீறும் செயலாகும்! மு.சோ. கட்சி

T

The Leader Desk

செப்டம்பர் 6, 2021 • 4:25 AM

சிறைச்சாலைகளின் கொள்ளளவுக்கு மேல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை மனித உரிமைகளை மீறும் செயலாகும்! மு.சோ. கட்சி   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மு.சோ.கட்சியின் நிர்வாகச் செயலாளர் சமீர கொஸ்வத்த உட்பட எதிர்ப்பாளர்கள் நீண்ட காலம் சிறை வைக்கப்பட்டுள்ளார்கள்.
  • இதனால், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள 5 எதிர்ப்பாளர்களில் மூவருக்கு கொரோனா தொற்றியிருப்பதாகவும், அவர்கள் முறைப்படி தனிமைப்படுத்தலில் வைக்கப்படவில்லையெனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

மு.சோ.கட்சியின் நிர்வாகச் செயலாளர் சமீர கொஸ்வத்த உட்பட எதிர்ப்பாளர்கள் நீண்ட காலம் சிறை வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு பிணை வழங்காமல் இழுத்தடிப்பதற்காக பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அதிகாரசபையும் சேர்ந்து பொது சொத்துக்களுக்கு பாரிய சேதம் விளைவித்ததாகக் கூறி குற்றம் சுமத்தியிருப்தே இதற்குக் காரணமென நீத அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் புபுது ஜயகொடகுறிப்பிடப்பட்டுள்ளார்.

இதனால், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள 5 எதிர்ப்பாளர்களில் மூவருக்கு கொரோனா தொற்றியிருப்பதாகவும், அவர்கள் முறைப்படி தனிமைப்படுத்தலில் வைக்கப்படவில்லையெனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாத்திரமல்ல, சிறைச்சாலைகளின் கொள்ளளவுக்கு மேல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை மனித உரிமைகளை மீறும் செயலாகுமெனவும், இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்ப்பாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக அவசர பேச்சுவார்த்தையொன்றை பெற்றுத் தருமாறும் புபுது ஜயகொட தனது கடிதத்தில் நீதி அமைச்சரிடம் கோரியுள்ளார்.

சிறைச்சாலைகளில் தற்போது ​கொவிட் தொற்று பரவி வருவதன் காரணமாக பிணை வழங்கக் கூடிய அனைத்து கைதிகளுக்கும் பிணை வழங்குமாறு பரிந்துரை செய்யப்பட்டிருந்தாலும், திட்டமிட்டு பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி பிணை வழங்குவதை தடுத்திருப்பதாகவும் புபுது ஜயகொட எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...