Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

அரசாங்கத்தின் தவறுகளை மறைக்க ஒருவருக்கொருவர் விரல் நீட்டுவதை இனியாவது தவிர்த்து கொள்ளுங்கள்! ஹரின்

T

The Leader Desk

செப்டம்பர் 2, 2021 • 4:46 PM

அரசாங்கத்தின் தவறுகளை மறைக்க ஒருவருக்கொருவர் விரல் நீட்டுவதை இனியாவது தவிர்த்து கொள்ளுங்கள்! ஹரின்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தொடர்ந்தும் தெரிவிக்கையில், அமைச்சர் ஒருவர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்து வெளியே வந்து இது அனைத்திற்கும் எதிர்க்கட்சியினர் தான் காரணம் என்று கூறியிருந்தார், நகைச்சுவையாக உள்ளது.
  • அவர்களது கருத்துக்களை கேட்டீர்களா?
  • நாங்களா சரியான நேரத்திற்கு தடுப்பூசிகளை கொண்டுவராமல் இருந்தோம், நாங்கள சரியான தேரத்திற்கு நாட்டை முடக்கலாம் இருந்தோம்?
எழுத்து அளவு:

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அமைச்சர் ஒருவர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்து வெளியே வந்து இது அனைத்திற்கும் எதிர்க்கட்சியினர் தான் காரணம் என்று கூறியிருந்தார், நகைச்சுவையாக உள்ளது.

நாங்களா சரியான நேரத்திற்கு தடுப்பூசிகளை கொண்டுவராமல் இருந்தோம், நாங்கள சரியான தேரத்திற்கு நாட்டை முடக்கலாம் இருந்தோம்? ஆர்ப்பாட்டங்கள் தான் இதற்க்கு காரணமென அவர் குறிப்பிட்டுள்ளார், இந்த இடத்தில தெளிவாக ஒரு விடயத்தை கூறவேண்டும், கோவிட் பிரச்சினையின் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியினர் தனி தனியாக அவதானத்தோடு செயற்பட்டோம், நாம் என்றும் கட்சி ஆதரவாளர்களை அழைக்கவில்லை. நாங்கள் மக்களுக்காகவே தனியாக வீதிக்கு இறங்கி போராடினோம்.

ஆகவே அந்த அமைச்சருக்கு நான் கூறிக்கொள்கிறேன் உங்களுடைய தவறுகளை மறைக்க ஒருவருக்கொருவர் விரல் நீட்டுவதை இனியாவது தவிர்த்து கொள்ளுங்கள்.

ஆசிரியர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டங்கள் செய்தார்கள், அவர்கள் பேச்சுவார்த்தைக்கு கேட்டபோது நீங்கள் செவி சாய்த்தீர்களா? அவர்களது கருத்துக்களை கேட்டீர்களா? அவர்களுடன் கலந்துரையாடினீர்களா? எதுவும் இல்லை இதனால் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்தில் பெரியவர் முதல் அனைவருமே தோல்வியடைந்து விட்டனர். இன்று யாராவது ஒருவர் அரசாங்கத்திற்கு எதிராக விமர்சித்து பேசினால் மறுநாள் அவர் குற்ற புலனாய்வு பிரிவிவில் இருக்கின்றார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கருத்து வெளியிட்ட ஷெஹான் என்ற சகோதரர் எட்டாவது நாளாகவும் குற்றப் புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அவர்களை விசாரணை செய்து அவர்கள் வாய்மூலமாக எம்மை பற்றி ஏதாவது தகவல் பெற்று, எம்மை கைது செய்யவே இவர்கள் முயற்சிக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அரசாங்கத்தின் தவறுகளை மறைக்க ஒருவருக்கொருவர் விரல் நீட்டுவதை இனியாவது தவிர்த்து கொள்ளுங்கள்! ஹரின் | Tamil Leader | We Lead the Nation