Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

இராணுவத்திற்கு பைசர் தடுப்பூசி அதிகாரத்தை வழங்குவதற்கு எதிர்ப்பு!

T

The Leader Desk

செப்டம்பர் 1, 2021 • 5:40 PM

இராணுவத்திற்கு பைசர் தடுப்பூசி அதிகாரத்தை வழங்குவதற்கு எதிர்ப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஓகஸ்ட் 29 ஞாயிற்றுக்கிழமை, பைசர் தடுப்பூசியை நிர்வகிக்க இராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டதாக இராணுவத் தளபதி கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
  • தொற்றுநோயியல் பிரிவின் இரண்டு விசேட வைத்தியர்களின் ஆலோசனைகளை மாத்திரம் கருத்திற்கொண்டு தீர்மானங்களை மேற்கொள்வதால், பிரச்சினைகள் ஏற்படுவதாக, சுகாதார அமைச்சருடன் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
  • அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தமது எதிர்ப்பினை துறைக்கு பொறுப்பான அமைச்சருக்கு அறிவித்துள்ளது.
எழுத்து அளவு:

ஓகஸ்ட் 29 ஞாயிற்றுக்கிழமை, பைசர் தடுப்பூசியை நிர்வகிக்க இராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டதாக இராணுவத் தளபதி கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

தடுப்பூசி வழங்கும்போது, தடுப்பூசி வழங்கும் முறை, மற்றும் தடுப்பூசிகளின் விநியோகம் சுகாதாரத் துறையால் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், இதுத் தொடர்பில் அனைத்துத் தீர்மானங்களும், பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் எஸ்.எம் ஆர்னோல்ட் தலைமையில் தொற்றுநோயியல் பிரிவின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டில் இராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்படுவதற்கும் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

"பைசர் தடுப்பூசியை இராணுவம் அல்லது இராணுவத்திற்கு மாத்திரம் கொடுக்கும் தீர்மானத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம், இராணுவத்திற்கு தடுப்பூசியை வழங்குவதானால், போரின் போது சுகாதாரத் துறைக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்” என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்திய நிபுணர் நவீன் டி சொய்சா ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தமது எதிர்ப்பினை துறைக்கு பொறுப்பான அமைச்சருக்கு அறிவித்துள்ளது.

"இந்த முறைகேட்டை விரைவில் சரிசெய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனக் கோரி நேற்றைய தினம் (31)  சுகாதார அமைச்சருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளோம்.”

ஸ்ரீலங்காவின் தடுப்பூசி திட்டம் உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச அளவில் பாராட்டுக்களை பெற்றுள்ளதாகவும், இது வளர்ந்த நாடுகளின் நிலைக்கு சுகாதார குறிகாட்டிகளை கொண்டுச் செல்ல உதவிய ஒரு முறையாகும் எனவும், எனினும் கொரோனா தடுப்பூசி செயற்பாட்டின் போதான இந்த செயற்பாடானது முறையற்ற ஒரு செயற்பாடு எனவும், சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஷெனால் பெர்னாண்டோவின் கையொப்பத்துடன் எழுதப்பட்ட கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கோவிட் நோய் ஒரு பொது சுகாதார அவசரநிலை எனவும், அதை கட்டுப்படுத்தும் தொழில்நுட்ப அறிவு சுகாதாரத் துறைக்கு காணப்படுவதாகவும், தடுப்பூசி திட்டம் மற்றும் தொற்றுநோய் பற்றிய தொழில்நுட்ப தீர்மானங்களை தொற்றுநோயியல் பிரிவு மற்றும் சுகாதார அமைச்சே மேற்கொள்ள வேண்டுமெனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தொற்றுநோயியல் பிரிவின்  இரண்டு விசேட வைத்தியர்களின் ஆலோசனைகளை மாத்திரம் கருத்திற்கொண்டு  தீர்மானங்களை மேற்கொள்வதால், பிரச்சினைகள் ஏற்படுவதாக, சுகாதார அமைச்சருடன் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

தொற்றுநோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பூசி திட்டத்திற்கு தலைமை தாங்குமாறு அரச  வைத்திய அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தடுப்பூசி வழங்கும் திட்டங்கள் உட்பட தொற்றுநோய் கட்டுப்பாடு உள்ளிட்ட  ஆறு பிரதான பொறுப்புகள் குறித்து ஆறு நிபுணர் குழுக்கள் நிறுவப்பட வேண்டுமெனவும்,  பொது சுகாதார பதில் பணிப்பாளர் நாயகத்தின், நேரடி மேற்பார்வையின் கீழ் அவை செயற்பட வேண்டுமெனவும், அந்த சங்கம் சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சுகாதாரத் துறையினர் வழங்கிய தலைமைத்துவத்தின் அடிப்படையிலேயே,  ஸ்ரீலங்காவின் தடுப்பூசி திட்டம் மாத்திரமன்றி சுகாதாரத் துறையும் சர்வதேசப் பாராட்டினைப் பெற்றதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

 

 
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இராணுவத்திற்கு பைசர் தடுப்பூசி அதிகாரத்தை வழங்குவதற்கு எதிர்ப்பு! | Tamil Leader | We Lead the Nation