Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

வைத்திய நிபுணர் ஜயருவன் பண்டார சிஐடிக்கு!

T

The Leader Desk

ஆகஸ்ட் 31, 2021 • 9:29 AM

வைத்திய நிபுணர் ஜயருவன் பண்டார சிஐடிக்கு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த விடயங்கள் தொடர்பில் மருந்தவருக்கு தெரிந்த தகவல்களை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதால் இன்று காலை 8.30க்கு குற்ற விசாரணை திணைக்களத்திற்கு வருமாறு அவருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • என்றாலும் இவரது விண்ணப்பத்திற் குறைபாடுகள் இருப்பதாகக் கூறி அது நிராகரிக்கப்பட்டது.
  • தவிரவும், மருத்துவர் பண்டார ஊடகங்களில் வெளியிட்ட கருத்துக்கள் சம்பந்தமாக ஒழுக்காற்று விசாரணை நடைபெறவுள்ளதாகவும் தெரிய வருகிறது.
எழுத்து அளவு:

அன்டிஜன் பரிசோதனைக் கருவிகள் இறக்குமதியில் மற்றும் பரிசோதனைகள் சம்பந்தமாக பாரதூரமான பிரச்சினை இருப்பதாகவும் மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை, அரச மருந்துகள் கூட்டுத்தாபனம், ஆகிய நிறுவனங்களில் நடக்கும் ஊழல், மோசடிகள் மற்றும் மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுகள் அழிக்கப்பட்டமை சம்பந்தமாகவும் அவர் யூடியுப் அலைவரிசையில் வெளியிட்ட கருத்துக்கள் சம்பந்தமாக விசாரிப்பதற்காகவே CID க்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த விடயங்கள் தொடர்பில் மருந்தவருக்கு தெரிந்த தகவல்களை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதால் இன்று காலை 8.30க்கு குற்ற விசாரணை திணைக்களத்திற்கு வருமாறு அவருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தவிரவும், மருத்துவர் பண்டார ஊடகங்களில் வெளியிட்ட கருத்துக்கள் சம்பந்தமாக ஒழுக்காற்று விசாரணை நடைபெறவுள்ளதாகவும் தெரிய வருகிறது. விசேட மருத்துவ நிபுணர் ஜயருவன் பண்டார் இதற்கு முன்பு சுகாதார அமைச்சின் ஊடக செய்தியாளராக இருந்ததோடு, அந்தப் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.

இவர் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு விண்ணப்பம் செய்திருந்தார். என்றாலும் இவரது விண்ணப்பத்திற் குறைபாடுகள் இருப்பதாகக் கூறி அது நிராகரிக்கப்பட்டது.

இதை எதிர்த்த இவர் நீதிமன்ற உதவியை நாடினார். இவரது விண்ணப்பத்தை ஏற்று சுயாதீனக் குழுவொன்றின் மேற்பார்வையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பதவிகளுக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதுவரை பதவிகளுக்கான வாக்கெடுப்பு நடைபெறவில்லை

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

வைத்திய நிபுணர் ஜயருவன் பண்டார சிஐடிக்கு! | Tamil Leader | We Lead the Nation