Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

காவல்துறை அடக்குமுறையை நிறுத்துமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 30, 2021 • 6:03 PM

காவல்துறை அடக்குமுறையை நிறுத்துமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரசியலமைப்பின் ஊடாக உறுதிசெய்யப்பட்ட ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தியே, தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதாக தொழிற்சங்கத் தலைவர்கள் கடந்த வார இறுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
  • ஓகஸ்ட் 3ஆம் திகதி, மாணவர் இயக்கத்தின் ஏற்பாட்டில், நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில், கொத்தலாவல பல்கலைக்கழக திருத்த சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
  • இதன்போது அரச சொத்துக்களை சேதப்படுத்தியதாகக் கூறி மாணவர் மற்றும் செயற்பாட்டாளர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
எழுத்து அளவு:

அரசியலமைப்பின் ஊடாக உறுதிசெய்யப்பட்ட ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தியே, தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதாக தொழிற்சங்கத் தலைவர்கள் கடந்த வார இறுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

ஓகஸ்ட் 3ஆம் திகதி, மாணவர் இயக்கத்தின் ஏற்பாட்டில், நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில், கொத்தலாவல பல்கலைக்கழக திருத்த சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இதன்போது அரச சொத்துக்களை சேதப்படுத்தியதாகக் கூறி மாணவர் மற்றும் செயற்பாட்டாளர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

"மேலும், 13 மாணவர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர், அவர்களில் சிலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு பிணையில் விடுதலை செய்வதற்கும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.”

இலங்கை தோட்ட  சேவையாளர் சங்கத்தின் தலைவரும் பொது சொத்து மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் தலைவரும் இணை ஏற்பாட்டாளருமான சத்துர சமரசிங்கவைத் தேடி அவரது வீட்டுக்கு வருகைத்தந்து வீட்டில் இருப்பவர்களை அச்சுறுத்துவதோடு, பணியபாற்றும்  இடங்களைக் கண்டறிய பொலிஸ் உளவாளிகள் அனுப்பப்பட்டுள்ளனர்” என சுதந்திர வர்த்தக வலையம் மற்றும் பொது சேவை ஊழியர் சங்கத்தின் இணை செயலாளரும், தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவின் பிரதிநிதியுமான அன்டன் மார்கஸ், ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என எச்சரித்த தொழிற்சங்கத் தலைவரை கைது செய்த விடயமும் குறித்த கடித்தின் ஊடாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கனிய வளங்கள் முன்னணியின்  தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித ஊடகங்களுக்கு தவறான தகவல்களை வெளியிட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்டு பின்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஓகஸ்ட் 3ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் அரசியலமைப்பால் உறுதிப்படுத்தப்பட்ட ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதாகவும், அரச சொத்துக்களுக்கு எவ்வித சேதமும் விளைவிக்கப்படவில்லை எனவும், சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவரான அன்டன் மார்கஸ், ஜனாதிபதியிடம்  வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறான நிகழ்வுகள் நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்குமென தெரிவித்துள்ள தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத் தலைவர்கள், காவல்துறை அடக்குமுறையை நிறுத்தவும், தமது கோரிக்கைகளுக்கு சாதகமாக பதிலளிக்குமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐக்கிய தொழிலாளர் கூட்டமைப்பு, இலங்கை வர்த்தகம் மற்றும் பொது தொழிலாளர் சங்கம், சுதந்திர வர்த்தக வலையங்கள் மற்றும் பொது சேவை ஊழியர் சங்கம், இலங்கை சுதந்திர ஊழியர் சங்கம், தேசிய ஊழியர் சங்கம், இலங்கை வங்கி ஊழியர் சங்கம், இலங்கை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு,  இலங்கை தொழிலாளர் சங்கம், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம், இலங்கை தொழிலாளர் சம்மேளனம், கூட்டு தோட்டத் தொழிலாளர் சங்கம், உள்ளிட்ட தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையில் அங்கம் வகிக்கும் அமைப்புகள் இணைந்து இந்த கடிதத்தை அனுப்பியுள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

காவல்துறை அடக்குமுறையை நிறுத்துமாறு ஜனாதிபதிக்கு கடிதம்! | Tamil Leader | We Lead the Nation