Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

பாரிய நிதி செலவில் மகிந்தவால் திறக்கப்பட்ட சங்குப்பிட்டி பாலம் உக்கிப்போயுள்ளது!

T

The Leader Desk

ஆகஸ்ட் 30, 2021 • 11:42 AM

பாரிய நிதி செலவில் மகிந்தவால் திறக்கப்பட்ட சங்குப்பிட்டி பாலம் உக்கிப்போயுள்ளது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குறித்த பாலம் 16.01.2011 அன்று இன்றைய பிரதமரும் அப்போதைய ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவினால் திறந்து வைக்கப்பட்டது.
  • பாலத்தை தாங்கும் ஆணிகள், நட்டுகள் மற்றும் பாலத்தின் முக்கிய பகுதிகளில் துருப்பிடித்து சிதைவடைகின்றதாகவும், இதேவேளை, பாலத்தின் வடக்கு பக்கமாக பொருத்தபபட்டிருந்த பாதுகாப்பு பகுதிகள் சில காணாமல் போயுள்ளதாகவும் கூறப்கின்றது.
  • பாரிய நிதி செலவில் நிர்மானிக்கப்பட்ட குறித்த பாலம் தற்பொழுது சேதமடைந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.
எழுத்து அளவு:

குறித்த பாலம் 16.01.2011 அன்று இன்றைய பிரதமரும் அப்போதைய ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவினால் திறந்து வைக்கப்பட்டது. பாரிய நிதி செலவில் நிர்மானிக்கப்பட்ட குறித்த பாலம் தற்பொழுது சேதமடைந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

இந்நிலையில் பாலம் அமைந்துள்ள பகுதியில் காணப்படும் கொங்கிறீட்டிலான பகுதிகளில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், பாலத்தின் பாகங்கள் துருப்பிடித்து சிதைவுகள் ஏற்பட்டு வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.

பாலத்தை தாங்கும் ஆணிகள், நட்டுகள் மற்றும் பாலத்தின் முக்கிய பகுதிகளில் துருப்பிடித்து சிதைவடைகின்றதாகவும், இதேவேளை, பாலத்தின் வடக்கு பக்கமாக பொருத்தபபட்டிருந்த பாதுகாப்பு பகுதிகள் சில காணாமல் போயுள்ளதாகவும் கூறப்கின்றது.

ஆரம்பத்தில் வருடம் தோறும் குறித்த பாலத்தை பராமரித்து வந்ததாகவும், எனினும் தற்பொழுது குறித்த பாலம் பராமரிக்கப்படுவதில்லை எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மக்களின் வரிப்பணத்தினைக் கொண்டு, பிரதமர் மகிந்தவினால் பாரிய நிதி செலவில் அமைக்கப்பட்ட குறித்த பாலத்தை உரிய முறையில் பாதுகாக்கி வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.      

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...