Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

கடுமையான சீனி தட்டுப்பாடு நெருங்கிவிட்டது - ஒரு மாதத்திற்கு மட்டுமே போதுமான இருப்பு!

T

The Leader Desk

ஆகஸ்ட் 30, 2021 • 5:41 AM

கடுமையான சீனி தட்டுப்பாடு நெருங்கிவிட்டது - ஒரு மாதத்திற்கு மட்டுமே போதுமான இருப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இருப்பினும், தற்போது சுமார் 40,000 மெட்ரிக் டன் சீனி கையிருப்பில் இருப்பதாக கூறப்படுகிறது மற்றும் ஒரு சேமிப்பு நிலையத்தில் மட்டும் சுமார் 20,000 மெட்ரிக் டன் விசேடமாக இறக்குமதி செய்யப்பட்ட தரமான சீனி கொகா கோலா உள்ளிட்ட பானங்கள் மற்றும் பிஸ்கட்டுகள் தயாரிப்புக்காக உள்ளன.
  • அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையின் கீழ், சீனி இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு புதிய சீனி ஓடர் செய்யப்பட்டாலும், அது நாட்டை வந்தடைய குறைந்தது 6 வாரங்கள் ஆகும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
  • சீனியை பதுக்கிவைத்திருந்த 3 கிடங்குகள் கைப்பற்றப்பட்டன இதற்கிடையில், நாட்டில் செயற்கையாக சீனி பற்றாக்குறை இருப்பதாகக் கூறி சீனியின் விலையை அதிகரிக்க முயன்ற மேலும் மூன்று மோசடி தொழிலதிபர்கள் பிடிபட்டுள்ளதாக 'அததெரன உக்குஸ்ஸா' தெரிவித்துள்ளது.
  • அதன்படி, நுகர்வோர் விவகார ஆணைக்குழு (சிஏஏ) சீதுவ, பண்டாரவத்தை, களனி, பட்டிவில மற்றும் வத்தல மாபோல பகுதிகளில் மூன்று பெரும் வியாபாரிகள் சீனியை மறைத்து சந்தையில் சீனியின் விலையை அதிகரிக்க முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளதுடன் 5455 மெட்ரிக் டன் சீனியும் பிடிபட்டுள்ளது.
எழுத்து அளவு:

இருப்பினும், தற்போது சுமார் 40,000 மெட்ரிக் டன் சீனி கையிருப்பில் இருப்பதாக கூறப்படுகிறது மற்றும் ஒரு சேமிப்பு நிலையத்தில் மட்டும் சுமார் 20,000 மெட்ரிக் டன் விசேடமாக இறக்குமதி செய்யப்பட்ட தரமான சீனி கொகா கோலா உள்ளிட்ட பானங்கள் மற்றும் பிஸ்கட்டுகள் தயாரிப்புக்காக உள்ளன.

அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையின் கீழ், சீனி இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு புதிய சீனி ஓடர் செய்யப்பட்டாலும், அது  நாட்டை வந்தடைய குறைந்தது 6 வாரங்கள் ஆகும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சீனியை பதுக்கிவைத்திருந்த 3 கிடங்குகள் கைப்பற்றப்பட்டன

இதற்கிடையில், நாட்டில் செயற்கையாக சீனி பற்றாக்குறை இருப்பதாகக் கூறி சீனியின் விலையை அதிகரிக்க முயன்ற மேலும் மூன்று மோசடி தொழிலதிபர்கள் பிடிபட்டுள்ளதாக 'அததெரன உக்குஸ்ஸா' தெரிவித்துள்ளது.

அதன்படி, நுகர்வோர் விவகார ஆணைக்குழு (சிஏஏ) சீதுவ, பண்டாரவத்தை, களனி, பட்டிவில மற்றும் வத்தல மாபோல பகுதிகளில் மூன்று பெரும் வியாபாரிகள் சீனியை மறைத்து சந்தையில் சீனியின் விலையை அதிகரிக்க முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளதுடன் 5455 மெட்ரிக் டன் சீனியும்  பிடிபட்டுள்ளது.

சீதுவ பகுதியில் சீல் வைக்கப்பட்ட சீனி உரிமம் இன்றி செயல்பட்டு வருகிறது மற்றும் அதன் உரிமையாளர் ஆவணங்களுடன் இன்று (30) ஆணைக்குழுவிற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில் 61 மெட்ரிக் டன் சீனி இருந்தது.

களனியிலுள்ள பட்டிவில பகுதியில் 594 மெட்ரிக் டன் சீனி சேமிப்பு கிடங்கில் இருந்ததும் சம்பவ இடத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்ட சீனி சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு பகுதிகளாக எடுக்கப்பட்டதாக கூறினார்.

சீனிக்கு சீல் வைக்கப்பட்டு, அதுவும் உரிமம் பெறாத கிடங்கு என்பது உறுதி செய்யப்பட்டது.

இதேவேளை, நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) செவ்வாய்க்கிழமை (28) வத்தளை மாபோல பகுதியில் உள்ள கிடங்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4,800 டன் சீனியை கைப்பற்றியது.

நாட்டில் சீனி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது போல் கான்பித்து ஒரு கிலோ சீனியின் விலையை ரூ. 220 ஆக உயர்த்திய மோசடி வியாபாரிகளின் பின்னணியில் சீனி இருப்பு கண்டுபிடிக்கப்பட்டதாகும் இது தொடர்பாக ஆணைக்குழு விசாரணையை தொடங்கியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் ஒரு கிலோ சீனிக்கு வரி 25 சதமாக  குறைக்கப்படும் என்று அரசித அரச வர்த்தமாணி அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு,சீனியின் இருப்பு 650,000 மெட்ரிக் டன்களாக இரட்டிப்பாகியுள்ளதாக அரசாங்கத்தின் 'தினமின' தெரிவித்துள்ளது.இப்போது ஒரு கிலோ சீனி சந்தையில் ரூ 220 அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

வத்தளை, மாபோல பகுதியில் உள்ள ஒரு சேமிப்பு கிடங்கில் இந்த அளவு சீனி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக எழுந்த புகார்களை அடுத்து நுகர்வோர் விவகார ஆணைக்குழுவிற்கு (சிஏஏ) ஒரு கூடுதலான சீனி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக புகார் கிடைத்தது.

இதேவேளை, இலங்கை சீனி நிறுவனம் இன்று (30) முதல் ஒரு கிலோ சீனியை ரூ .125 க்கு வழங்க தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

சந்தையில் சீனியின் விலை வேகமாக அதிகரிப்பதே இதற்குக் காரணம். தற்போது சந்தையில் ஒரு கிலோ சீனி 200 முதல் 220 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

அதன்படி, இலங்கை சீனி நிறுவனத்திற்கு சொந்தமான செவனகல மற்றும் பெல்வத்த சீனி ஆலைகள் ஊடாக இலங்கை முழுவதும் கூட்டுறவு மற்றும் பட்ஜெட் கடைகளுகள்,லங்கா சதொசாவுக்கு போதுமான சீனியை வழங்கும் என்று ஏற்றுமதி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்தார்.

அதன்படி, ஒரு கிலோ பழுப்பு சீனியை CWE இலிருந்து ரூ .130 க்கும், தூரத்தைப் பொறுத்து  சீனியின் அந்த தொகைக்கு அடுத்த சில நாட்களில் கூட்டுறவு நிறுவனங்களில் பெறலாம், என்றார்.

இலங்கையில் உள்ள அனைத்து சீனி ஆலைகளும் 20% சீனி தேவையை மட்டுமே உற்பத்தி செய்கின்றன, அதன்படி சிலோன் சீனி நிறுவனம் எதிர்காலத்தில் வெள்ளை மற்றும் பழுப்பு சீனியை இறக்குமதி செய்யும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ஜானக வக்கும்புற, நாட்டில் பல வர்த்தகர்கள் சீனி விலையை வரையின்றி அதிகரிப்பதன் மூலம் அதிக இலாபம் ஈட்டுவதாகவும், எனவே இந்த நிலையை கட்டுப்படுத்த அரசு நேரடியாக தலையிடுவதாகவும் கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கடுமையான சீனி தட்டுப்பாடு நெருங்கிவிட்டது - ஒரு மாதத்திற்கு மட்டுமே போதுமான இருப்பு! | Tamil Leader | We Lead the Nation