Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் நீண்ட கொடுஞ்சிறை வாழ்வுக்கு தீர்வு வேண்டும்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 28, 2021 • 3:04 PM

தமிழ் அரசியல் கைதிகளின் நீண்ட கொடுஞ்சிறை வாழ்வுக்கு தீர்வு வேண்டும்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அவ் அறிக்கையில் மேலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌சவால், பயங்கரவாத தடைச் சட்டத்தின் 13ஆவது பிரிவுக்கமைய, ஆலோசனைச் சபை உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளார்கள்.
  • மேலும், ஆலோசனைச் சபையின் செயற்கருமங்கள் எப்போதும் போல் காலத்தால் அள்ளுண்டு போகாது, ‘தமிழ் அரசியல் கைதிகளின் நீண்ட கொடுஞ்சிறை வாழ்வுக்கு முழுமையான தீர்வினைப் பெற்றுத் தர வேண்டும்’ என்று இவ் அமைப்பு எதிர்பார்க்கின்றது.
  • கடந்த 2020 பெப்ரவரியில் கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளிடம் ‘விரைவில் ஆணைக் குழுவொன்றை அமைத்து அரசியல் கைதிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும்’ என்று கூறியிருந்தார்.
எழுத்து அளவு:

அவ் அறிக்கையில் மேலும்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌சவால், பயங்கரவாத தடைச் சட்டத்தின் 13ஆவது பிரிவுக்கமைய, ஆலோசனைச் சபை உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளார்கள்.

முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா தலைமையிலான இந்த ஆலோசனைச் சபையில் ஓய்வு நிலை மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.ஹெய்யந்துடுவ மற்றும் ஓய்வு பெற்ற சொலிசிட்டர் ஜெனரல் சுஹத கம்லத் ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம் பெற்றுள்ளனர்.

இந்தச் சபையானது, பயங்கரவாத நடவடிக்கைகள் சம்பந்தமாகச் சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றவர்கள், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் ஆராய்ந்து, இவர்களுக்கான விடுதலைப் பொறிமுறையினை கண்டறிந்து, ஜனாதிபதிக்கான பரிந்துரை ஆலோசனையைச் செய்யுமென்று தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக, நீண்டகாலமாக ஆலோசனைச்சபை ஒன்று நியமிக்கப்படாத காரணத்தினால், கைதிகள் தங்களது பிரச்சினைகளை இச்சபையிடம் முன்வைக்கச் சந்தர்ப்பம் கிடைக்கும் என்று, ஜனாதிபதியின் சட்டத்துறை பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்த முன்னேற்ற முன்னெடுப்பினை பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ‘குரலற்றவர்களின் குரல் அமைப்பு’ வரவேற்கின்றது.

மேலும், ஆலோசனைச் சபையின் செயற்கருமங்கள் எப்போதும் போல் காலத்தால் அள்ளுண்டு போகாது, ‘தமிழ் அரசியல் கைதிகளின் நீண்ட கொடுஞ்சிறை வாழ்வுக்கு முழுமையான தீர்வினைப் பெற்றுத் தர வேண்டும்’ என்று இவ் அமைப்பு எதிர்பார்க்கின்றது.

கடந்த 2020 பெப்ரவரியில் கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளிடம் ‘விரைவில் ஆணைக் குழுவொன்றை அமைத்து அரசியல் கைதிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும்’ என்று கூறியிருந்தார்.

கடந்த காலத்தில் ஜே.வி.பி கைதிகள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு அன்றைய ஜனாதிபதியால் ‘நீதி அதிகாரம் கொண்ட ஆணைக் குழு’ ஒன்று நிறுவப்பட்டது. இந்நிலையில் தற்போது, வர்த்தமானியிடப்படாத ‘ஆலோசனைச் சபை’ ஒன்றையே தற்போதைய ஜனாதிபதி நியமித்துள்ளார்.

எவ்வாறாயினும் பெயரிடப்பட்டுள்ள, சட்டம் மற்றும் நீதித்துறை சார்ந்த உறுப்பினர்களின் தெரிவானது, எமக்கு நம்பிக்கையினை தருகின்றது. குறிப்பாக, கடந்த காலத்தில் பதில் சட்டமா அதிபராகக் கடமையாற்றிய சிரேஷ்ட சொலிசிட்டர் ஜெனரல் சுஹத கம்லத் அவர்கள், தமிழ் அரசியல் கைதிகளுக்கெதிரான பயங்கரவாத தடைச் சட்ட வழக்குகள் தொடர்பில் நன்கு பரிச்சயம் கொண்டவராக விளங்கியிருந்தார்.

அது மட்டுமன்றி, கொழும்பு- மகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை கோரி உணவு தவிர்ப்பில் ஈடுபட்டிருந்தபோது, 2015 /10/ 15 அன்று அவர் சிறைச்சாலைக்கு நேரில் சென்று, நீதி அமைச்சருக்கு முன்னால், பல தீர்வுப் பொறிமுறைகளை செயற்படுத்துவதாகக் கூறியிருந்தமை, நினைவு மீட்டத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

தமிழ் அரசியல் கைதிகளின் நீண்ட கொடுஞ்சிறை வாழ்வுக்கு தீர்வு வேண்டும்! | Tamil Leader | We Lead the Nation