Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்,மக்கள் தலைவர்களை கொவிட் தொற்றுக்கு இரையாக்க முயற்சி!

T

The Leader Desk

ஆகஸ்ட் 27, 2021 • 5:26 PM

ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்,மக்கள் தலைவர்களை கொவிட் தொற்றுக்கு இரையாக்க முயற்சி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முன்னிலை சோஷலிஸக் கட்சியின் சமீர கொஸ்வத்த, அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே, ஜயவர்தனபுர பல்கலைக் கழக மாணவர் சஙகத் தலைவர் அமில சந்தீப ஆகிய மூவருக்குமே கொரோனா தொற்றியுள்ளது.
  • ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழக மாணவர் சங்கத்தின் தலைவர் அமில சந்தீப பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக செல்லும் போது ஒகஸ்ட் 05ம் திகதி கடத்தப்பட்டார்.
  • அன்றிரவு தொலைக்காட்சி விவாதமொன்றில் பங்கேற்றுவிட்டு திரும்பிச் செல்லும் வழியல் 06ம் திகதி அதிகாலையில் அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே கைது செய்யப்பட்டார்.
  • அங்கு இவர்களுக்கு அன்டிஜன் மற்றும் PCR பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
எழுத்து அளவு:

முன்னிலை சோஷலிஸக் கட்சியின் சமீர கொஸ்வத்த, அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே, ஜயவர்தனபுர பல்கலைக் கழக மாணவர் சஙகத் தலைவர் அமில சந்தீப ஆகிய மூவருக்குமே கொரோனா தொற்றியுள்ளது.

ஓகஸ்ட் 03ம் திகதி பத்தரமுல்ல, பாராளுமன்ற சந்திக்கு அருகாமையில் பாதையில் நடைபெற்ற மாணவர் மக்கள் இயக்கத்தின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள், மாணவர் சங்கங்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கலைந்து சென்றதன் பின்னர், மாணவர் மக்கள் இயக்கத்தின் கோஷிலா ஹன்ஸமாலி கைது செய்யப்பட்டார்.

முன்னிலை சோஷலிஸக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் சமீர கொஸ்வத்த அன்றிரவு கைது செய்யப்பட்டார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழக மாணவர் சங்கத்தின் தலைவர் அமில சந்தீப பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக செல்லும் போது ஒகஸ்ட் 05ம் திகதி கடத்தப்பட்டார். அன்றிரவு தொலைக்காட்சி விவாதமொன்றில் பங்கேற்றுவிட்டு திரும்பிச் செல்லும் வழியல் 06ம் திகதி அதிகாலையில் அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் கொழும்ப ரிமாண்ட சிறையில் (CRP) தடுத்து வைக்கப்பட்டனர். அங்கு இவர்களுக்கு அன்டிஜன் மற்றும் PCR பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பரிசோதனை முடிவுகளின்படி இவர்களுக்கு கொவிட் 19 வைரஸ் தொற்றியிருக்கவில்லை.

அதன் பின்னர், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பதுளை, தல்தென தடுப்பு முகாமில் 25ம் திகதி மேற்கொண்டPCR பரிசோதனைகளின் முடிவுகளுக்கேற்ப மூவருக்கும் கொவிட் வைரஸ் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்படி தனிமைப்படுத்தல் முகாம் எனக் கூறி நூற்றுக்கணக்கானவர்களை எவ்வித பொறுப்புடமையுமின்றி தடுத்து வைத்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அவர்களை மருத்துவ சிகிச்சைக்காவது அனுப்பவில்லையென அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் சுட்டிக்காட்டுகிறது. மாணவர் மக்கள் தலைவர்களுக்கு பிணை வழங்காமல் தடுத்து வைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ள அரசாங்கத்தின் திட்டத்தின்படி இந்த மூவரும் கொரோனா தொற்றுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் கூறுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்,மக்கள் தலைவர்களை கொவிட் தொற்றுக்கு இரையாக்க முயற்சி! | Tamil Leader | We Lead the Nation