Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

காவல்துறை அதிகாரிகளின் "தீவிரவாத," கருத்துக்கள் மீது சர்வமதத் தாக்குதல்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 27, 2021 • 12:01 PM

காவல்துறை அதிகாரிகளின் "தீவிரவாத," கருத்துக்கள் மீது சர்வமதத் தாக்குதல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட சில பொலிஸ் அதிகாரிகளுடன் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களான நந்தன முனசிங்க மற்றும் தேசபந்து தென்னகோன் ஆகியோர் பௌத்த தேரர்களை சந்தித்து, தாம் பௌத்தர்கள் என்பதாலா தம்மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக கேள்வி எழுப்பினர்.
  • குறித்த கருத்தானது "உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளை இனவாத மற்றும் மதவாத நிலைக்குத் தள்ளும் ஒரு மோசமான நோக்கத்தைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது." என மதத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
  • தர்ஷன சர்மா மற்றும் சங்கத்தின் உறுப்பினர் ஆகியோர் இந்த ஊடக அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.
எழுத்து அளவு:

"உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட உயர் பொலிஸ் அதிகாரிகள் குழு சமீபத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், தாம் சிங்கள பௌத்தர்களாக இருப்பதால், தம்மை குற்றவாளிகளாக காட்ட முயற்சிப்பதாக தெரிவித்திருந்தனர்.” பௌத்த, கத்தோலிக்க, இந்து மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்கள் ஓகஸ்ட் மாதம் 24ஆம் திகதி வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட சில பொலிஸ் அதிகாரிகளுடன் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களான நந்தன முனசிங்க மற்றும் தேசபந்து தென்னகோன் ஆகியோர் பௌத்த தேரர்களை சந்தித்து, தாம் பௌத்தர்கள் என்பதாலா தம்மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக கேள்வி எழுப்பினர்.

குறித்த கருத்தானது "உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளை  இனவாத மற்றும் மதவாத நிலைக்குத் தள்ளும் ஒரு மோசமான நோக்கத்தைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது." என மதத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

"இதுபோன்ற தீவிரவாத கருத்துகளுக்கு மத்தியில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து எந்த அரசியல் தலையீடும் இல்லாமல் நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நாங்கள் வலியுறுத்துகிறோம்."

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த  தேசிய கத்தோலிக்க பேச்சாளர் குழுவின் உறுப்பினர், அருட்தந்தை சிரில் காமினி பெர்னாண்டோ மற்றும் மறைமாவட்ட தகவல் தொடர்பு மையத்தின் இயக்குநர் ஜூட் கிரிசாந்த,  களுத்துறை மாவட்டத்தின் தலைமை சங்கநாயக்கர் பரகடுவே சரணங்கர,  பெலிகல அமரசிறி தேரர், பெரியமுல்ல ஷேக் அப்துல்லா அப்துல் ரஹ்மான் மற்றும் நீர்கொழும்பு நீதிமன்ற பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதிக்கு பொறுப்பான  மொஹமட் முஹஜரின் உள்ளிட்ட இஸ்லாமிய தலைவர்கள்,  இலங்கை இந்து குருக்கள் சங்கத்தின் செயலாளர் சிவஸ்ரீ ஆர். தர்ஷன சர்மா மற்றும் சங்கத்தின் உறுப்பினர் ஆகியோர் இந்த ஊடக அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

பிரதி காவல்துறைமா அதிபர்களான நந்தன முனசிங்க மற்றும் தேசபந்து தென்னக்கோன் ஆகியோர் மல்வத்து மற்றும் அநுராதபுரம் அடமஸ்தான தலைமை பீடாதிபதிகளை சந்தித்தமை குறித்து விசாரணை நடத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அரச வாகனங்களில், சீருடையுடன் தமது பிரதேசத்திற்கு வெளியே சென்று, பீடாதிபதிகளை சந்தித்து, ஊடகங்களின் முன்னிலையில் மிகவும் ஒழுக்கேடாக செயற்பட்டுள கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளதாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

காவல்துறை அதிகாரிகளின் "தீவிரவாத," கருத்துக்கள் மீது சர்வமதத் தாக்குதல்! | Tamil Leader | We Lead the Nation