Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

வெளிநாட்டு வேலைகளில் இருந்து வரும் பணம் குறைந்து வருகிறது!

T

The Leader Desk

ஆகஸ்ட் 26, 2021 • 5:16 PM

வெளிநாட்டு வேலைகளில் இருந்து வரும் பணம் குறைந்து வருகிறது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜுலை மாதம் வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து 453.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு கிடைத்துள்ளது.
  • மத்திய வங்கி வட்டாரத் தகவல்களுக்கு அமைய இது கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அனுப்பப்பட்ட 702.1 மில்லியனுடன் ஒப்பிடும்போது 35% குறைவு எனத் தெரிய வந்துள்ளது.
  • ஜூன் மாதத்தில் வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து 478 மில்லியன் டொலர்களும், மே மாதத்தில் 460 மில்லியன் டொலர்களும் கிடைத்துள்ளன.
  • கடந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களுக்கான மொத்த பணவரவு 2,407 மில்லியன் டொலர்களாகும்.
எழுத்து அளவு:

ஜுலை மாதம் வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து 453.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு கிடைத்துள்ளது.

மத்திய வங்கி வட்டாரத் தகவல்களுக்கு அமைய இது கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அனுப்பப்பட்ட 702.1 மில்லியனுடன் ஒப்பிடும்போது 35% குறைவு எனத் தெரிய வந்துள்ளது.

ஜூன் மாதத்தில் வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து 478 மில்லியன் டொலர்களும், மே மாதத்தில் 460 மில்லியன் டொலர்களும் கிடைத்துள்ளன.

கடந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களுக்கான மொத்த பணவரவு 2,407 மில்லியன் டொலர்களாகும். இது 2021 மே மாத இறுதியில் கிடைத்த 2,846 மில்லியன்களுடன் ஒப்பிடும்போது 18% வளர்ச்சியை காட்டுகிறது.

எனினும், ஜூன் மாதத்தில் கிடைத்த குறைந்தளவிலான பண வரவுடன், 2021ஆம் ஆண்டின் முதல் பாதியின் முடிவில் மொத்த தொகை 3,324 மில்லியன் டொலர்களாக காணப்பட்டதோடு, இது 2020 முதல் பாதியின் 2,980 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடும்போது 11.6% வளர்ச்சிய காண்பிக்கின்றது.

இந்த ஆண்டு ஜூலை மாதத்தில், முதல் ஏழு மாதங்களில் மொத்த வருவாய் 3,777 மில்லியன் டொலர்களாகும், எனினும் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 3,682 மில்லியன் டொலர்களாக காணப்பட்டதோடு இது 2.6% குறைவாகும்.

2018 உடன் ஒப்பிடுகையில் 2019 ஆம் ஆண்டில் வெளிநாட்டு ஊழியர்களின் பணம் 4.4% குறைந்து 6.7 பில்லியன் டொலர்களாக காணப்பட்டது. அதேவேளை, 2020 ஆம் ஆண்டில் பணம் அனுப்பப்படுவது 5.8% அதிகரித்து 7.1 பில்லியன் டொலர்களாக அமைந்திருந்தது.

இந்த நிலையில், 2021 நிறைவுக்குள் வெளிநாட்டு பணம் 8 பில்லியன் டொலர்களை எட்டும் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

பல சர்வதேச எல்லைகள் மூடப்பட்டதால், புலம்பெயர் தொழிலாளர்கள் காத்திருக்கும் காலம் அதிகரித்துள்ளது.

மேலும், இலங்கைக்கு பணம் அனுப்புவதற்கான முறையான செயற்பாடுகளின் பயன்பாடு அதிகரித்ததோடு, குடும்பங்கள் தொற்று நோய் அச்சுறுத்தலால் பாதிப்புக்களை எதிர்நோக்கியிருந்ததால்,  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமது குடும்பத்திற்கு அனுப்பிய பணத்தின் அளவு அதிகரித்தமை இந்த வளர்ச்சிக்கு காரணமாக அமைந்ததாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறெனினும், முறையான வங்கி முறைக்கும் உத்தியோகபற்றற்ற சந்தையால் வழங்கப்படும் பரிமாற்ற விகிதங்களுக்கும் இடையே உள்ள கூர்மையான வேறுபாடு காரணமாக, புலம்பெயர் தொழிலாளர்கள் பணத்தை மாற்றுவதற்கான மோசடி வழிகளை நாட வழிவகுத்துள்ளமையால், இந்த வளர்ச்சி நிலைமையில் ஏப்ரல் முதல் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ள பல நாடுகளில் தடுப்பூசி வழங்குதல்,  கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மையைக் குறைத்துள்ளதாகவும், இது பண வரவுகள் குறைவதற்கு வழிவகுத்துள்ளதாகவும் பொருளாதார ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...