Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

சுகாதார அமைச்சின் செயலாளர் அமைச்சை மீறி செயற்படுவதை நிறுத்துமாறு கோரிக்கை!

T

The Leader Desk

ஆகஸ்ட் 25, 2021 • 6:05 PM

சுகாதார அமைச்சின் செயலாளர் அமைச்சை மீறி செயற்படுவதை நிறுத்துமாறு கோரிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்த சூழ்நிலையை எதிர்கொண்டதாகவும், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுமாறு, கொழும்பில் (நேற்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போது தொழிற்சங்கத் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
  • "நாங்கள் ஒரு அறிவியல் முடக்கத்தை கேட்டோம்.
  • இராணுவ வைத்தியப் படையின் முன்னாள் கட்டளை அதிகாரி மற்றும் இராணுவ சுகாதார சேவையின் தலைமை பணிப்பாளரான, மேஜர் ஜெனரல் வைத்தியர் எஸ்.
எழுத்து அளவு:

"நீங்கள் முதுகெலும்புடன் சுகாதார அமைச்சராக செயற்பட விரும்பினால், உங்களைத் தாண்டி வரும் உத்தரவுகளை அமுல்படுத்துவதிலிருந்து உடனடியாக சுகாதார செயலாளருக்கு தடை விதியுங்கள்.”

இல்லையெனில் சுகாதார சேவையில் சரியான தீர்மானங்களை மேற்கொள்வதில் சீரான தன்மையை பேணுவது கடினம் என வைத்திய ஆய்வக விஞ்ஞானிகள் நிபுணர்களின் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்த சூழ்நிலையை எதிர்கொண்டதாகவும், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுமாறு,  கொழும்பில் (நேற்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போது தொழிற்சங்கத் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இராணுவ வைத்தியப் படையின் முன்னாள் கட்டளை அதிகாரி மற்றும் இராணுவ சுகாதார சேவையின் தலைமை பணிப்பாளரான, மேஜர் ஜெனரல் வைத்தியர் எஸ். எச். முனசிங்க சுகாதார அமைச்சின் தற்போதைய செயலாளராக கடமையாற்றுகின்றார்.

கொடிய தொற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முடக்கப்பட்ட விதம் அறிவியல் பூர்வமானது அல்ல எனக் குற்றம் சாட்டிய ரவி குமுதேஷ், இலங்கை அரசியல் ரீதியாக முடக்கப்பட்டுள்ளதாக வலியுறுத்தியுள்ளார்.

"நாங்கள் ஒரு அறிவியல் முடக்கத்தை கேட்டோம். எங்களுக்கு அரசியல் முடக்கம் கிடைத்துள்ளது. வழங்கப்பட்டது. முடிந்தால் ஏதாவது செய்யுங்கள் என்ற ஒரு ஆச்சரியமான முடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.”

இதுபோன்ற சூழ்நிலையில் எதிர்பார்த்த நோக்கங்கள் நிறைவேறாது எனவும்,  பொறுப்பு முற்றிலும் அரசியல் சார்ந்ததல்ல எனவும் ரவி குமுதேஷ் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார அமைச்சுக்கு இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது கடமைகளை ஒழுங்காக மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சிற்கு உத்தரவிடுமாறு, இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ரவி குமுதேஷ் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

 

 
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சுகாதார அமைச்சின் செயலாளர் அமைச்சை மீறி செயற்படுவதை நிறுத்துமாறு கோரிக்கை! | Tamil Leader | We Lead the Nation