Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

பாதுகாப்பு செயலாளர் துருக்கி ஆயுத கண்காட்சியில் பங்கேற்றார்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 25, 2021 • 5:34 PM

பாதுகாப்பு செயலாளர் துருக்கி ஆயுத கண்காட்சியில் பங்கேற்றார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இஸ்டான்புல்லில் இடம்பெறும் நான்கு நாள் சர்வதேச பாதுகாப்பு தொழிற்துறை கண்காட்சியில் (IDEF'21) கலந்து கொண்டுள்ள பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஹுலுசி அகாரையும் (Hulusi Akar) சந்தித்துள்ளார்.
  • ஹஸன், இலங்கை பாதுகப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தினேஷ் நானயக்கார மற்றும் பாதுகாப்புச் செயலாளரின் இராணுவ உதவியாளர் கேர்ணல் கே.
  • இதன்போது ஸ்ரீலங்கா அரசாங்கம் ஆயுதங்கள் எதனையும் கொள்வனவு செய்ததா என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
எழுத்து அளவு:

இஸ்டான்புல்லில் இடம்பெறும் நான்கு நாள் சர்வதேச பாதுகாப்பு தொழிற்துறை கண்காட்சியில் (IDEF'21) கலந்து கொண்டுள்ள பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஹுலுசி அகாரையும் (Hulusi Akar) சந்தித்துள்ளார்.

சர்வதேச பாதுகாப்பு தொழில்முறைக் கண்காட்சி - 2021இன் ஓர் அங்கமாக இடம்பெற்ற இந்த கலந்துரையாடல் இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது

சர்வதேச பாதுகாப்பு தொழில்முறைக் கண்காட்சி - 2021இல், ஆயுதங்கள், தரைப்படை வாகனங்கள், இராணுவ இலத்திரனியல் சாதனங்கள், கடற்படை ஆயுத தளவாடங்கள், விமான முறை, தளவாட வாகனங்கள், விநியோக உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு துறைசார் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.

இதன்போது ஸ்ரீலங்கா அரசாங்கம் ஆயுதங்கள் எதனையும் கொள்வனவு செய்ததா என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்த கலந்துரையாடலில் துருக்கிக்கான இலங்கை தூதுவர் அதிமேதகு எம். ஆர். ஹஸன், இலங்கை பாதுகப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தினேஷ் நானயக்கார மற்றும் பாதுகாப்புச் செயலாளரின் இராணுவ உதவியாளர் கேர்ணல் கே. டபிள்யூ. ஜெயவீர ஆகியோரும் கலந்துகொண்டனர்.

துருக்கி குடியரசின் ஜனாதிபதியின் அனுசரணையுடன் அந்நாட்டு தேசிய பாதுகாப்பு அமைச்சினால் நடத்தப்பட்ட இந்த கண்காட்சி - 2021 நிகழ்வானது ஓகஸ்ட் 17 முதல் 20 வரை, துருக்கிய ஆயுதப்படைகள் குழுமத்தின் ஏற்பாட்டுடனும் முகாமைத்துவத்துடனும் தூயாப் (TÜYAP) வர்த்தக மற்றும் ஒன்றுகூடல் மாநாட்டு மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

கடல், விமான மற்றும் நில பாதுகாப்பில் செயற்படும் சுமார் ஆயிரம் சர்வதேச நிறுவனங்கள் வர்த்தக கண்காட்சியில் பங்கேற்றதாக துருக்கி பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

(காணொளி துருக்கிய பாதுகாப்பு அமைச்சிற்கு உரியது)

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...