Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

இணையவழியில் அதிபர்-ஆசிரியர் போராட்டம்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 22, 2021 • 4:09 AM

இணையவழியில் அதிபர்-ஆசிரியர் போராட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொரோனா தொற்று காரணமாக பொதுவெளியில் போராட்டங்கள் தடுக்கப்பட்டாலும், எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடரும் என போராட்டத்தை ஆரம்பித்த நிலையில், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
  • பொதுமக்களும் தங்களால் இயன்றவரை இணையப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க கேட்டுக்கொண்டார்.
  • இது போன்று எங்கள் நடவடிக்கைகள் முன்னோக்கி நகர்கின்றன.
எழுத்து அளவு:

கொரோனா தொற்று காரணமாக பொதுவெளியில் போராட்டங்கள் தடுக்கப்பட்டாலும், எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடரும் என போராட்டத்தை ஆரம்பித்த நிலையில், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இது போன்று எங்கள் நடவடிக்கைகள் முன்னோக்கி நகர்கின்றன. இந்தப் பிரச்சினையை இழுத்துக்கொண்டிருக்காமல் தீர்வைப் பெற்றுத்தருமாறு நாங்கள் அரசாங்கத்திடம் கேட்கின்றோம்” என சிரேஷ்ட ஆசிரியர் சங்க செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களும் தங்களால் இயன்றவரை இணையப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க கேட்டுக்கொண்டார்.

"கவிதைகள் எழுத முடியும், பாடல்களை எழுத முடியும், கவிதைகள், பாடல்களைப் பாட முடியும், கேலிச்சித்திரங்களை வரைய முடியும். உங்களால் முடிந்த எல்லா வழிகளிலும் இந்த எதிர்ப்பு போராட்டத்தில் இணையுங்கள்”

Teachers 2021.08.20

ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பாக ஏனைய அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடி அவர்களின் ஆதரவைப் பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை

ஊதியப் பற்றாக்குறை பிரச்சினையை முன்னிறுத்தி ஒரு மாதத்திற்கும் மேலாக வீதியில் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் அதிபர்கள் தொழிற்சங்கக் கூட்டணி ஓகஸ்ட் 18ஆம் திகதி அமைச்சரவை உப குழுவை சந்தித்தது. 

சுபோதனி சம்பள அறிக்கையைத் தவிர வேறு ஏதேனும் முன்மொழிவுகள் காணப்படுகின்றதா  என அரசாங்க உபகுழு தொழிற்சங்கங்களைக் கேட்டிருந்தது.

அனைத்து ஆசிரியர் சங்கங்களின் தொழிற்சங்கங்களும் ஏகமனதாக சுபோதனி சம்பள முன்மொழிவைத் தவிர வேறு எந்த முன்மொழிவும் இல்லை எனவும், ஆசிரியர்களுக்காக அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட சுபோதனி சம்பள முன்மொழிவை அமுல்படுத்த வேண்டும் எனவும் கூறியிருந்தன.

இந்த விடயங்கள் தொடர்பான இறுதித் தீர்மானத்தை எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவிக்கவும், செவ்வாய்க்கிழமை நிதி அமைச்சுடன் கலந்துரையாடல் நடத்தவும் அமைச்சரவை உபகுழு ஒப்புக்கொண்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் ரவீந்திர ரணவீர தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இணையவழியில் அதிபர்-ஆசிரியர் போராட்டம்! | Tamil Leader | We Lead the Nation