Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

அனைவரும் தியாகம் செய்ய தயாராகுங்கள்! ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை

T

The Leader Desk

ஆகஸ்ட் 20, 2021 • 5:34 PM

அனைவரும் தியாகம் செய்ய தயாராகுங்கள்! ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
  • நாடு முழுவதுமாக மூடப்படுவது நாட்டின் பொருளாதாரத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு இன்று இரவு 10 மணி முதல் 30 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை நாட்டை மூட முடிவு செய்துள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.
  • நாட்டில் பதிவான பெரும்பாலான கொவிட் இறப்புகள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும், எனவே நாற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வாரத்திற்கு ஒரு முறையாவது விரைவான உடற்பரிசோதனை நடத்துமாறு சுகாதாரத் துறைக்கு அவர் அறிவுறுத்தினார்.
  • இதன் காரணமாக, சமீபத்தில் இலங்கைக்கு தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதில் தான் விசேட அக்கறை காட்டியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறினார்.
எழுத்து அளவு:

நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த முக்கியமான தருணத்தில், நாட்டில் உள்ள அனைவரும் நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொண்டு திட்டமிட்ட முறையில் நாட்டை முன்னேற்ற வேண்டும். எனவே, கொவிட் தொற்றுநோயை தோற்கடிக்க அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

சுகாதாரத் துறை கஷ்ட்டமான நிலையில் இருந்தாலும், ஒரு அரசாங்கமாக நாங்கள் வெளிநாட்டு கடன்களை திருப்பிச் செலுத்துதல் மற்றும் சம்பளத்தை செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கவனம் செலுத்த வேண்டியிருக்கின்றது என்று ஜனாதிபதி கூறினார்.

நாடு முழுவதுமாக மூடப்படுவது நாட்டின் பொருளாதாரத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு இன்று இரவு 10 மணி முதல் 30 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை நாட்டை மூட முடிவு செய்துள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.

நாட்டில் பதிவான பெரும்பாலான கொவிட் இறப்புகள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும், எனவே நாற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வாரத்திற்கு ஒரு முறையாவது விரைவான உடற்பரிசோதனை நடத்துமாறு சுகாதாரத் துறைக்கு அவர் அறிவுறுத்தினார்.

உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் மருத்துவ நிபுணர்கள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசியே ஒரே தீர்வு என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். இதன் காரணமாக, சமீபத்தில் இலங்கைக்கு தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதில் தான் விசேட அக்கறை காட்டியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறினார்.

சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் தலைவர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசியதாகவும், தடுப்பூசிகளைப் பெறுவதற்காக இலங்கை வெளியுறவு அமைச்சு மற்றும் அவரது ஊழியர்களின் மூலம் மற்ற நாட்டுத் தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பியதாகவும் ஜனாதிபதி கூறினார்.

அந்த முயற்சியின் விளைவாக, தற்போது ஒவ்வொரு மாதமும் தேவையான எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை இலங்கை பெற்று வருகிறது என்றும் ஜனாதிபதி கூறினார்.

இலங்கை முதலில் இந்தியாவில் அஸ்ட்ரா செனிகா மற்றும் இரண்டாவதாக சீனாவில் சய்னோஃபார்ம் தடுப்பூசி பெற்றுக் கொண்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டார், ஆனால் தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்கு ஒரு மாதம் தாமதமானது.

எவ்வாறாயினும், சய்னோஃபார்ம் தடுப்பூசி மே 08 முதல் தொடர்ந்து பொதுமக்களுக்கு கிடைக்கிறது என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் இருந்து ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசியும், ஜப்பானில் இருந்து அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியும், ரஷ்யாவிடம் இருந்து ஸ்புட்னிக் தடுப்பூசியும் கிடைக்கப்பெற்றுள்ளதால், உலகின் தலைசிறந்த தடுப்பூசி செலுத்தும் நாடுகள் வரிசையில் இலங்கையும் உள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

ஜனாதிபதியின் விசேட உரை பின்வருமாறு.

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அனைவரும் தியாகம் செய்ய தயாராகுங்கள்! ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை | Tamil Leader | We Lead the Nation