Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

இலங்கை பொலிஸுக்கான வெளிநாட்டுப் பயிற்சியை நிறுத்துமாறு சர்வதேச அழுத்தம்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 20, 2021 • 6:11 AM

இலங்கை பொலிஸுக்கான வெளிநாட்டுப் பயிற்சியை நிறுத்துமாறு  சர்வதேச அழுத்தம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அண்மைய கைதுகளின் போதான மரணங்கள், சித்திரவதைகள் மற்றும் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்படுவதாக வெளியாகும் செய்திகளுக்கு மத்தியில் மே மாதம் ஸ்கொட்லாந்து பொலிஸ் இலங்கை பொலிஸுக்கான யிற்சியை இடைறுத்த தீர்மானித்துள்ளது.
  • "இலங்கை மற்றும் பிற இடங்களில் எங்களது அனுபவம் என்னவென்றால், பொலிஸாரின் ஊழல் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான விருப்பம் அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியில் இல்லாத நிலையில் எவ்வளவு 'பயிற்சி' அளித்தாலும் அது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடையாது.
  • எனினும், 2012 ஆம் ஆண்டு முதல், 90 தடவைகள், பிரித்தானிய பொலிஸ் அதிகாரிகள் அல்லது பொலிஸ் ஊழியர்கள் பயிற்சிக்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
எழுத்து அளவு:

அண்மைய கைதுகளின் போதான மரணங்கள், சித்திரவதைகள் மற்றும் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்படுவதாக வெளியாகும் செய்திகளுக்கு மத்தியில் மே மாதம் ஸ்கொட்லாந்து பொலிஸ் இலங்கை பொலிஸுக்கான யிற்சியை இடைறுத்த தீர்மானித்துள்ளது.

2007ஆம் ஆண்டு முதல் இலங்கையில் பொலிஸ் பயிற்சியை இடைநிறுத்திய பிரித்தானியா இந்த திட்டத்தை மீண்டும் தொடங்குவதற்கு முன்னர் விபரங்களை வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

pa 30588716 czrrvz

 Keith Brown

ஸ்கொட்லாந்து பொலிஸாரால் தொடர்ச்சியாக நடத்தப்படும் பயிற்சி, இலங்கை பொலிஸாரின்  மனித உரிமை மீறல்களை அனுமதிக்கும் அபாயங்கள் காணப்படுவதாக, ஸ்கொட்லாந்து நீதி அமைச்சர் கீத் பிரவுனுக்கு எழுதிய கடிதத்தில், நான்கு மனித உரிமைக் குழுக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் இலங்கை பொலிஸாரின் மனித உரிமை செயற்பாட்டில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை" என மனித உரிமைகள் கண்காணிப்பகம், சித்திரவதையில் இருந்து விடுதலை, அமைதி மற்றும் நீதிக்கான இலங்கை பிரச்சாரம் மற்றும் பெக்ஸ் கிரிஸ்டி  ஸ்கொட்லேண்ட் ஆகிய அமைப்புகள் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளன.

"இலங்கை மற்றும் பிற இடங்களில் எங்களது அனுபவம் என்னவென்றால், பொலிஸாரின் ஊழல் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான விருப்பம் அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியில் இல்லாத நிலையில் எவ்வளவு 'பயிற்சி' அளித்தாலும் அது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடையாது. அதற்குப் பதிலாக என்ன நடக்குமென்றால், தொடர்ந்து பயிற்சி அளிப்பது ஊழல் நிறைந்த பொலிஸுக்கு ஒப்புதல் அளிக்கும்”

இலங்கை அரசாங்கமும் பொலிஸும் "மறுசீரமைப்பில் உண்மையான ஆர்வம் காட்டும் வரை" தற்போதைய பயிற்சியை நிறுத்துவதோடு, தற்போதைய பயிற்சி மீளாய்வு மற்றும் பகுப்பாய்வு விபரங்களை வெளியிடுமாறு குறித்த நான்கு அமைப்புகளும் கோரியுள்ளன.

ஸ்கொட்லாந்மு பொலிஸ் இலங்கை பொலிஸுக்கு பயிற்சி அளிக்க பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு நிதியுதவி அளிக்கின்றது. 

சட்டத்தரணி யாஸ்மின் சூக்கா தலைமையிலான உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டம் (ITJP) கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில், பிரித்தானியா இலங்கை பொலிஸுக்கான பயிற்சியை இரத்து செய்ய வேண்டுமெனக் கோரியது.

சித்திரவதைக்குப் பொறுப்பேற்பதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பிரிவுகளுக்கு பொறுப்பாக இருந்த குறைந்தபட்சம் மூன்று இலங்கை பொலிஸ் அதிகாரிகளுக்கு பிரித்தானியா பயிற்சி அளித்ததாக, ரெட்ரஸ் (Redress) மற்றும் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டம் இணைந்து 2019 இல் ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுத்து மூலம் அறிவித்தது.

எனினும், 2012 ஆம் ஆண்டு முதல், 90 தடவைகள், பிரித்தானிய பொலிஸ் அதிகாரிகள் அல்லது பொலிஸ் ஊழியர்கள் பயிற்சிக்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

ஸ்கொட்லாந்து பயிற்சி இடைநிறுத்தப்பட்டமை குறித்து இலங்கை பொலிஸோ அல்லது அரசாங்கமோ இதுவரை எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...