Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

முதல் முறையாக, ஒரு தேசிய அமைப்பு பெண் பிரதிநிதித்துவத்தை அங்கீகரிக்கிறது!

T

The Leader Desk

ஆகஸ்ட் 20, 2021 • 6:01 AM

முதல் முறையாக, ஒரு தேசிய அமைப்பு பெண் பிரதிநிதித்துவத்தை அங்கீகரிக்கிறது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஐக்கிய தொழிலாளர் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி ஆ.ஸ்வஸ்திகா ஜூலை 20, 2021 அன்று, இருபது வருட வரலாற்றைக் கொண்ட, தேசிய தொழிலாளர் ஆலோசனைக் சபையின் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
  • "என்னைத் தவிர முழு கூட்டத்திலும் சுமார் 5 பெண்கள் இருந்தனர்.
  • எனவே தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையில் பெண்கள் குறைவாகவே பிரதிநிதித்துவம் செய்யப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது." என அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • "சில ஆண் தொழிற்சங்கத் தலைவர்கள் பெண்கள் பிரதிநிதியாவதற்கான முயற்சியைக் கூட தீவிரமாக தடுக்கிறார்கள் என்பதை நான் அனுபவித்திருக்கிறேன்." சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர்களின் கூற்றுப்படி, தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை 1995 ஆம் ஆண்டிலிருந்து செயற்பட்டு வருகின்றது.
எழுத்து அளவு:

ஐக்கிய தொழிலாளர் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி ஆ.ஸ்வஸ்திகா ஜூலை 20, 2021 அன்று, இருபது வருட வரலாற்றைக் கொண்ட, தேசிய தொழிலாளர் ஆலோசனைக் சபையின் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

தொழிலாளர் ஐக்கிய கூட்டமைப்போடு இணைந்த ஒரு தொழிற்சங்கமான வணிக மற்றும் தொழில்துறை தொழிலாளர் சங்கத்தின் துணை பொதுச் செயலாளராகவும் செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையை பிரதிநிதித்துவப்படுத்திய முதல் தொழிற்சங்கப் பிரதிநிதியான ஸ்வஸ்திகா, தனது முதல் சந்திப்பின் அனுபவங்களை ஊடகங்களுக்கும் வெளியிட்டுள்ளார்.

"என்னைத் தவிர முழு கூட்டத்திலும் சுமார் 5 பெண்கள் இருந்தனர். அவர்கள் தொழில் திணைக்களம், முதலீட்டுச் சபை போன்றவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் என்பதை நான் அறிந்துகொண்டேன். எனவே தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையில் பெண்கள் குறைவாகவே பிரதிநிதித்துவம் செய்யப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது." என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய தொழிலாளர் ஆலோசனை சபைக்கு தான் பரிந்துரைக்கப்பட்ட பின்னர், பெண்கள் தலைமையிலான பல அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் உட்பட பிரதிநிதிகள் ஆலோசனை சபையில் கலந்தாலோசிக்கப்படாத பல பிரச்சினைகளை தன்னுடன் விவாதித்ததாக தெரிவித்துள்ள ஸ்வஸ்திகா சபைக்கு அவர்கள் கொண்டு வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஏனைய தொழிற்சங்க பிரதிநிதிகள் உதவுவார்கள் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பெண்கள் எப்போதும் தொழிற்சங்கங்களை வழிநடத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள ஸ்வஸ்திகா

தொழிற்சங்கத் தலைவராக பெண்கள் முன்னேறுவதற்கு தடைகள் காணப்படுவதோடு, ஆண் தொழிற்சங்கத் தலைவர்கள் பெண்களை இரண்டாம் பட்சமாக நடத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

"சில ஆண் தொழிற்சங்கத் தலைவர்கள் பெண்கள் பிரதிநிதியாவதற்கான முயற்சியைக் கூட  தீவிரமாக தடுக்கிறார்கள் என்பதை நான் அனுபவித்திருக்கிறேன்."

சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர்களின் கூற்றுப்படி, தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை 1995 ஆம் ஆண்டிலிருந்து செயற்பட்டு வருகின்றது.

இது தொழில் திணைக்களம், தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் முதலாளிகளைக் கொண்ட ஒரு அமைப்பு.

நாட்டில் தொழிலாளர்களை பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொழில் அமைச்சர் மூலம் அமைச்சரவைக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

ஐக்கிய தொழிலாளர் கூட்டமைப்பு, இலங்கை வர்த்தகம் மற்றும் பொது தொழிலாளர் சங்கம், சுதந்திர வர்த்தக வலையங்கள் மற்றும் பொது சேவை ஊழியர் சங்கம், இலங்கை சுதந்திர ஊழியர் சங்கம்,

தேசிய ஊழியர் சங்கம், இலங்கை வங்கி ஊழியர் சங்கம், இலங்கை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு,  இலங்கை தொழிலாளர் சங்கம், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம், இலங்கை தொழிலாளர் சம்மேளனம், கூட்டு தோட்டத் தொழிலாளர் சங்கம், உள்ளிட்ட 14 தொழிலாளர் அமைப்புகள், தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையில் அங்கம் வகிக்கின்றன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...