Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

சீனா ஆப்கானிஸ்தானில் உள்ள உலோக வளம் மீது கண் வைக்கிறது!

T

The Leader Desk

ஆகஸ்ட் 20, 2021 • 3:25 AM

சீனா ஆப்கானிஸ்தானில் உள்ள உலோக வளம் மீது கண் வைக்கிறது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆப்கானிஸ்தானில் ஹமீது கர்சாய், அஷ்ரப் கனி ஆகியோர் தலைமையிலான அரசுகள் செயல்பட்ட போதே அங்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீட்டு திட்டங்களை சீனா மேற்கொண்டு வந்தது.குறிப்பாக, சுரங்கம், தொலைத்தொடர்பு, சாலை கட்டுமானம் போன்ற திட்டங்களில் முதலீடு செய்து வந்தது.
  • தலீபான் ஆட்சியை சீனா அங்கீகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கு பின்னணியில் இன்னொரு காரணமும் இருப்பதாக தெரிகிறது.
  • இந்த உலோகங்கள், 1 லட்சம் கோடி டாலர் முதல் 3 லட்சம் கோடி டாலர்வரை மதிப்புடையவை என்று அமெரிக்காவுக்கான ஆப்கானிஸ்தான் முன்னாள் தூதர் அகமதுஷா கடாவாசை தெரிவித்துள்ளார்.
  • இந்திய மதிப்பில் ரூ.75 லட்சம் கோடி முதல் ரூ.225 லட்சம் கோடி டாலர்வரை இருக்கும்.
எழுத்து அளவு:

ஆப்கானிஸ்தானில் ஹமீது கர்சாய், அஷ்ரப் கனி ஆகியோர் தலைமையிலான அரசுகள் செயல்பட்ட போதே அங்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீட்டு திட்டங்களை சீனா மேற்கொண்டு வந்தது.குறிப்பாக, சுரங்கம், தொலைத்தொடர்பு, சாலை கட்டுமானம் போன்ற திட்டங்களில் முதலீடு செய்து வந்தது. தாமிர சுரங்கம், எண்ணெய் வயல் ஆகியவற்றில் முதலீடு செய்துள்ளது. இதுதவிர, ஆஸ்பத்திரிகள், நீர் சேமிப்பு திட்டங்கள் போன்றவற்றையும் உருவாக்கி கொடுத்தது. சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தையும் சீனா மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்தை ஆப்கானிஸ்தானுக்கும் நீட்டிக்க விரும்புகிறது.

இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலீபான்கள் கைப்பற்றி உள்ளனர். அங்கு முறைப்படி அரசு அமைந்த பிறகு, தலீபான்களை அங்கீகரிப்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று சீனா நேற்று முன்தினம் தெரிவித்தது. தலீபான் ஆட்சியை சீனா அங்கீகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கு பின்னணியில் இன்னொரு காரணமும் இருப்பதாக தெரிகிறது. ஆப்கானிஸ்தான், உலோக வளம் நிரம்பியது. மிகவும் அரிதான, விலை உயர்ந்த உலோகங்கள் அந்த மண்ணில் உள்ளன.

இந்த உலோகங்கள், ஐபோன், உயர்தொழில்நுட்ப ஏவுகணை வழிகாட்டு சாதனங்கள், மின்சார கார்களுக்கான ரீசார்ஜ் பேட்டரிகள், கம்ப்யூட்டர், டி.வி.டி. பிளேயர், நீராவி எந்திரம், சூப்பர் கண்டக்டர்ஸ், டெலிவிஷன், மானிட்டர்கள், லேசர், கண்ணாடி இழைகள் உள்ளிட்டவற்றை தயாரிக்க பயன்படுத்தக்கூடியவை.

இந்த உலோகங்கள், 1 லட்சம் கோடி டாலர் முதல் 3 லட்சம் கோடி டாலர்வரை மதிப்புடையவை என்று அமெரிக்காவுக்கான ஆப்கானிஸ்தான் முன்னாள் தூதர் அகமதுஷா கடாவாசை தெரிவித்துள்ளார். இந்திய மதிப்பில் ரூ.75 லட்சம் கோடி முதல் ரூ.225 லட்சம் கோடி டாலர்வரை இருக்கும். தலீபான் ஆட்சியுடன் நெருக்கமாக இருந்து இந்த உலோகங்களை வெட்டி எடுக்கும் திட்டங்களை பெற்று சம்பாதிக்கலாம் என்று சீனா கருதுவது தெரிய வந்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...