Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

இலங்கைத் தமிழர்கள் தற்கொலை முயற்சி!

T

The Leader Desk

ஆகஸ்ட் 19, 2021 • 12:53 PM

இலங்கைத் தமிழர்கள் தற்கொலை முயற்சி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதில் கைதாகியுள்ள இலங்கைத் தமிழர்கள், பொய் வழக்கில் கைது செய்துள்ள தங்களை, வழக்குகளிலிருந்து விடுதலை பெற்றும், தண்டனைக் காலத்திற்கு மேலும் சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைத்து வைத்துள்ளதாக அவ்வப்பொழுது போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • அப்போது, அவர்கள் மீது போராடியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கடந்த வாரம் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் (எண் 1) நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
  • இந்நிலையில், அச்சிறப்பு முகாமிலிருக்கும் 15இற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள், அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
எழுத்து அளவு:

இதில் கைதாகியுள்ள இலங்கைத் தமிழர்கள், பொய் வழக்கில் கைது செய்துள்ள தங்களை, வழக்குகளிலிருந்து விடுதலை பெற்றும், தண்டனைக் காலத்திற்கு மேலும் சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைத்து வைத்துள்ளதாக அவ்வப்பொழுது போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜாமீனில் வந்தவர்களையும் கைது செய்துள்ளதாகவும், கொடுமையான கரோனா காலத்திலாவது தங்களை விடுதலை செய்ய வேண்டும். குடும்பத்தினரோடு சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்து தொடர்ந்து பல்வேறு கட்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் கடந்த மாதம் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த மாதமும் அதேபோல், தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் மீது போராடியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கடந்த வாரம் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் (எண் 1) நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், அச்சிறப்பு முகாமிலிருக்கும் 15இற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள், அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இச்சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூக்க மாத்திரை மட்டுமின்றி, திக்சன் என்பவர் கழுத்தை அறுத்தும், ரமணன் என்பர் தனது வயிற்றுப் பகுதியை அறுத்தும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க காவல்துறை ஏற்பாடு செய்துள்ள நிலையில், காலம் கடந்தும் தமிழக அரசு தங்களை விடுதலை செய்யவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...