Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

கொரோனா போலி தடுப்பூசிகள் இந்தியா, ஆப்பிரிக்காவில் !

T

The Leader Desk

ஆகஸ்ட் 18, 2021 • 3:26 PM

கொரோனா போலி தடுப்பூசிகள் இந்தியா, ஆப்பிரிக்காவில் !

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த போலி தடுப்பூசி டோஸ்களை ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
  • ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளுக்கு கோடிக்கணக்கான கோவிஷீல்டு டோஸ்களை உற்பத்தி செய்து அனுப்பியுள்ளது சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா.
  • இந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கிய தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ் இதுவரை இந்தியாவில் 13 சதவீதம் மக்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்கள்.
எழுத்து அளவு:

இந்த போலி தடுப்பூசி டோஸ்களை ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

அத்துடன், பறிமுதல் செய்யப்பட்டவை போலி தடுப்பூசி மருந்துகள்தான் என்று, கோவிஷீல்டு தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்யும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் உறுதி செய்ததாகவும் கூறப்படுகிறது.

இத்தகைய போலி தடுப்பூசிகள் "உலக பொது சுகாதாரத்துக்கு தீவிரமான இடர்பாட்டை" ஏற்படுத்தக்கூடியவை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இத்தகைய போலிகளை கண்டறிந்து அவற்றை அகற்றவேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.

இந்திய அரசு இது குறித்து அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால், இந்திய சுகாதார அமைச்சகம் இது குறித்து விசாரணை செய்துகொண்டிருப்பதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

"இது போல நடக்காமல் தடுப்பதற்கு எங்களிடம் வலுவான அமைப்பு உள்ளது. ஆனால், இது போல இப்போது நடந்துள்ள நிலையில், ஒரு இந்தியர்கூட போலித் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம்" என்று பெயர் வெளியிட விரும்பாத ஒரு சுகாதாரத் துறை அலுவலர் மின்ட் செய்தித் தளத்திடம் கூறியுள்ளார்

ஆக்ஸ்ஃபோர்டு/அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் இந்த கோவிஷீல்டு தடுப்பூசிதான் அதிகமாக போடப்பட்டுள்ளது. 48.6 கோடி டோஸ் கோவிஷீல்டு டோஸ்கள் இதுவரை இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ளன.

ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளுக்கு கோடிக்கணக்கான கோவிஷீல்டு டோஸ்களை உற்பத்தி செய்து அனுப்பியுள்ளது சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா. நாடுகளோடு நேரடியாகப் போட்டுக்கொண்ட ஒப்பந்தம், ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட உலகளாவிய திட்டமான கோவேக்ஸ் ஆகியவற்றின் கீழ் இந்த தடுப்பூசி டோஸ்கள் பல நாடுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியா தனது அண்டை நாடுகள் சிலவற்றுக்கு ராஜீய உறவை மேம்படுத்தும் நோக்கத்தோடு கோவிஷீல்டு தடுப்பூசியை அனுப்பியுள்ளது.

ஆனால், ஏப்ரல், மே மாதங்களில் மோசமாகத் தாக்கிய கொரோனா வைரசின் இரண்டாவது அலையைத் தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை விரைவுபடுத்த விரும்பிய அரசாங்கம், தடுப்பூசி ஏற்றுமதிகளைத் தடை செய்தது.

அதையடுத்து இந்தியாவின் தேவைதான் தங்கள் முன்னுரிமை என்று கூறியது சீரம் நிறுவனம். இந்த ஆண்டு இறுதிவரை அவர்கள் மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதி செய்ய வாய்ப்பில்லை.

உலகிலேயே கொரோனா வைரசால் இரண்டாவது மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடு இந்தியா. தனது குடிமக்கள் அனைவருக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி செலுத்திவிடவேண்டும் என்று இலக்கு வைத்துள்ளது இந்தியா.

இந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கிய தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ் இதுவரை இந்தியாவில் 13 சதவீதம் மக்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்கள்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...