Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

முன்னாள் கடற்படை தளபதியை விடுவித்தமை தொடர்பாக சட்டமா அதிபருக்கு எதிராக இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு!

T

The Leader Desk

ஆகஸ்ட் 14, 2021 • 6:07 AM

முன்னாள் கடற்படை தளபதியை விடுவித்தமை தொடர்பாக சட்டமா அதிபருக்கு எதிராக இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • காலப்பகுதியில் மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் கடத்தப்பட்டு காணாமல் போனமை தொடர்பாக முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
  • இந்த வழக்கு கடந்த 4ஆம் திகதி உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை தொடரமுடியாது என சட்டமா அதிபர் அறிவித்திருந்தார்.
  • சட்டமா அதிபர் நாயகமும், அரச சட்டத்தரணியும் ஏதோ ஒரு அரசியல் அதிகாரத்தின் தவறான நடத்தை அல்லது சலுகைக்காக பிரதிவாதியான கரன்னாகொடவின் குற்றச்சாட்டுகளை அகற்ற சட்டவிரோதமாக முயற்சித்துள்ளதாக காணாமல் போனவர்களின் குடும்பங்கள் குற்றம் சாட்டுகின்றன.
எழுத்து அளவு:

சட்டமா அதிபருக்கு கிடைத்த ஏதோ சலுகை அல்லது இலாபத்தின் அடிப்படையிலேயே, வழக்கு விசாரணை நிறைவடைவதற்கு முன்னதாகவே, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மீதான குற்றப்பத்திரிகையை திடீரென மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த பின்னர், காணாமல் போனோர் குடும்ப ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

2008-2009 காலப்பகுதியில் மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் கடத்தப்பட்டு காணாமல் போனமை தொடர்பாக முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கடந்த 4ஆம் திகதி உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை தொடரமுடியாது என சட்டமா அதிபர் அறிவித்திருந்தார்.

சட்டமா அதிபர் நாயகமும், அரச சட்டத்தரணியும் ஏதோ ஒரு அரசியல் அதிகாரத்தின் தவறான நடத்தை அல்லது சலுகைக்காக பிரதிவாதியான கரன்னாகொடவின் குற்றச்சாட்டுகளை அகற்ற சட்டவிரோதமாக முயற்சித்துள்ளதாக  காணாமல் போனவர்களின் குடும்பங்கள் குற்றம் சாட்டுகின்றன.

இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை சட்டத்தின் கீழ் இது ஒரு குற்றவியல் குற்றம் என சுட்டிக்காட்டிய காணாமல் போனவர்களின் குடும்பங்கள், இதுத் தொடர்பில் உடனடியாக விசாரணை செய்து பதின்மூன்று வருடங்களாக தங்கள் அன்புக்குரியவர்களுக்காக நீதி கேட்டு போராடும், பெற்றோருக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். 

கடத்தப்பட்ட மற்றும் காணாமல் போன 11 பேரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடந்த 5ஆம் திகதி சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்னத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...