Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

பொத்துவிலைச் சேர்ந்த மௌலவி சுபையிர் அஹிலுக்கு சர்வதேச பாராட்டு!

T

The Leader Desk

ஆகஸ்ட் 12, 2021 • 12:15 PM

பொத்துவிலைச் சேர்ந்த மௌலவி சுபையிர் அஹிலுக்கு சர்வதேச பாராட்டு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சுபையிர் அஹில் முஹம்மத் மௌலவி அவர்கள் அதிகமாக ஆன்மீகம், இலக்கியம், சமூகப் பணிகளில் தன்னை அதிகம் ஈடுபடுத்தி வருகிறார்.
  • தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 118 வது பிறந்த நாள் நிகழ்ச்சி 118 மணி நேரம் தொடர் நிகழ்வாக நடந்தது.
  • குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந் த ஒரு தலைவர் குறித்து அனைவரும் பாராட்டும் வகையில் தனது கருத்துக்களை பதிவு செய்தார்.
எழுத்து அளவு:

சுபையிர் அஹில் முஹம்மத் மௌலவி அவர்கள் அதிகமாக  ஆன்மீகம், இலக்கியம்,  சமூகப் பணிகளில் தன்னை அதிகம் ஈடுபடுத்தி வருகிறார்.

இதுமட்டுமல்லாமல் இணைய வழியில் சர்வதேச அளவில் நடைபெறும் கருத்தரங்குகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 118 வது பிறந்த நாள் நிகழ்ச்சி 118 மணி நேரம் தொடர் நிகழ்வாக நடந்தது. இந்த நிகழ்வில் பங்கேற்று அந்த எளிய தலைவரின் சிறப்புக்கள் குறித்து விவரித்தார். இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் பாராட்டைப் பெற்றார்.

குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந் த ஒரு தலைவர் குறித்து அனைவரும் பாராட்டும் வகையில் தனது கருத்துக்களை பதிவு செய்தார். இதன் காரணமாக  ‘இந்தியா பிரைட்’  என்ற  சாதனை சான்றிதழை பெற்றுள்ளார்.

இதே போல் நோபிள் உலக சாதனை பேச்சரங்கத்தில் பங்கேற்று கல்வி எனும் தலைப்பில் உரையாற்றி நோபில் உலக சாதனை  சான்றிதழையும் பதக்கத்தை யும் பெற்றுள்ளார்.

மேலும் துபாயில் டிவைன் பிளாக் மஜ்லிசின் சார்பில் நடந் த மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் ‘இஸ்லாத்தில் இளைஞரின் பங்களிப்பு’ என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தி பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

தொடர்ந் து சமூக, இலக்கிய, சமுதாய பங்களிப்பில் தன்னை ஈடுபடுத்தி வரும் சுபையிர் அஹில் முஹம்மதுவுக்கு உலக தமிழர்கள் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பொத்துவிலைச் சேர்ந்த மௌலவி சுபையிர் அஹிலுக்கு சர்வதேச பாராட்டு! | Tamil Leader | We Lead the Nation