Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

அரசாங்கம் நாட்டு மக்களின் உயிருடன் விளையாடும் விளையாட்டை நிறுத்தவேண்டும்! சஜித்

T

The Leader Desk

ஆகஸ்ட் 11, 2021 • 4:29 PM

அரசாங்கம் நாட்டு மக்களின் உயிருடன் விளையாடும் விளையாட்டை நிறுத்தவேண்டும்! சஜித்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரசாங்கத்தின் செயற்பாடுகள் அந்தளவிற்கு மனிதாபிமானமற்றதாக மாறிவிட்டதாகவும் மக்களின் எதிர்ப்பாளராக அரசாங்கம் மாறிவிட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
  • சந்தையில் ஊட்டச்சத்துக்களுக்கு பெரும் பற்றாக்குறை நிலவுவதுடன் இதன் காரணமாக குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்வதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அரிசி, கோதுமை மா, சீனி, பால், கோப்பி மற்றும் இறைச்சி வகைகளின் மொத்த விலைகள் 16 முதல் 32 வீதம் வரை உயர்வடைந்துள்ளன.
எழுத்து அளவு:

அரசாங்கத்தின் செயற்பாடுகள் அந்தளவிற்கு மனிதாபிமானமற்றதாக மாறிவிட்டதாகவும் மக்களின் எதிர்ப்பாளராக அரசாங்கம் மாறிவிட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் நாட்டு மக்களின் உயிருடன் விளையாடும் விளையாட்டை ஒதுக்கி வைத்து விட்டு, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து உடனடியாக மக்கள் சார்பு கொள்கைக்கு மாற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனாவையும், பொருட்களின் விலையையும் கட்டுப்படுத்தும் திறனை அரசாங்கம் இழந்துவிட்டதாக எதிர்கட்சி தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரிசி மாஃபியாவை எதிர்கொள்வதாக அரசாங்கம் கூறிக் கொண்டாலும், அது முழுமையாக தோல்வியடைந்துள்ளதுடன், இன்று அரிசி விலைகள் அபாயகரமான அளவில் உயர்ந்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

நெருங்கிய நண்பர்களுக்கு அதிக வரிச்சலுகை வழங்கி இறக்குமதி செய்யப்பட்ட சீனியின் விலையும் இன்று அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், சீனி மோசடியால் ஏற்படும் இழப்பு சிறிதல்லவெனவும் கூறியுள்ளார்.

தேங்காய் எண்ணெய் மோசடி மற்றும் நச்சுத் தேங்காய் எண்ணெய் இறக்குமதியால் ஏற்படும் அழிவு மிகப்பெரியது எனவும் எதிர்க்கட்சியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேங்காய் எண்ணெய் விலையும் அதிகரித்துள்ளது.

சந்தையில் ஊட்டச்சத்துக்களுக்கு பெரும் பற்றாக்குறை நிலவுவதுடன் இதன் காரணமாக குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்வதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரிசி, கோதுமை மா, சீனி, பால், கோப்பி மற்றும் இறைச்சி வகைகளின் மொத்த விலைகள் 16 முதல் 32 வீதம் வரை உயர்வடைந்துள்ளன.

பால்மா, வெண்ணெய், சோயா, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்கள் மற்றும் தானியங்கள் பழங்களுடன் உற்பத்தி செய்யப்படும் உப உற்பத்தி பொருட்களின் விலைகள் மேலும் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர்த் கூறியுள்ளார்.

தீவிர வர்த்தக மாஃபியா செயல்படுகின்ற நிலையில், அதற்கும் அரசாங்கம் துணை நிற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

பொருட்களின் விலைக் கட்டுப்பாடு தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்புகள் மற்றும் சுற்றறிக்கைகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்றாட வாழ்வையே நடத்திச்செல்ல முடியாதுள்ள மக்களுக்கு, பொருட்களின் விலை அதிகரிப்பை தாங்கிக்கொள்ள முடியாதுள்ள நிலைமை காணப்படுகின்ற நிலையில், அது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை எனவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொள்ளாது தேவையற்ற பாரிய திட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அரசாங்கம் நாட்டு மக்களின் உயிருடன் விளையாடும் விளையாட்டை நிறுத்தவேண்டும்! சஜித் | Tamil Leader | We Lead the Nation