Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

ராஜபக்சர்கள் சுத்தியுள்ள கள்வர்களும், திருடர்களும், சொல்வதை கேட்டுத்தான் வேலை செய்கின்றார்கள்! முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

T

The Leader Desk

ஆகஸ்ட் 11, 2021 • 12:09 PM

ராஜபக்சர்கள் சுத்தியுள்ள கள்வர்களும், திருடர்களும், சொல்வதை கேட்டுத்தான் வேலை செய்கின்றார்கள்! முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ராஜபக்ச அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் மக்கள் விரக்தி அடைந்துள்ளதாகவும், இந்த நிலைமை தொடரும் பட்சத்தில் ராஜபக்ச குடும்பத்தில் அனைவருக்கும் எதிர்காலமே இல்லாமல் போகும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
  • பௌத்த தர்மத்தின் போதனையில் ஒரு விடயம் உள்ளது "நீ செய்து கொண்டதை நீயே அனுபவி" என்று சொல்லப்படுகின்றது, இன்று எமக்கும் அந்த நிலைமை தான் வந்துள்ளது.
  • கொழும்பு அபயராம விகாரையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

ராஜபக்ச அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் மக்கள் விரக்தி அடைந்துள்ளதாகவும், இந்த நிலைமை தொடரும் பட்சத்தில் ராஜபக்ச குடும்பத்தில் அனைவருக்கும் எதிர்காலமே இல்லாமல் போகும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

கொழும்பு அபயராம விகாரையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

இன்று என்ன பேசினாலும், என்ன கதை சொன்னாலும், இந்த ஆட்சியை ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகவே மாறியுள்ளது. இன்று எங்கள் நாடு பல சிக்கல்களுக்கு உள்ளாகியுள்ளது.

சரியான இடத்தில் சரியாக வேலை செய்ய சரியான ஆட்கள் இல்லை, சரியான ஒரு தொடர்பாடல் இல்லாமல் உள்ளது. சரியான ஒரு அரசியல்வாதி, சரியான ஒரு அதிகாரி என யாருமே இன்று இல்லை, இன்று தெளிவாக விளங்குகின்றது, மக்கள் பலத்தை கொடுத்தாலும், பலத்தை எடுத்தாலும் என்றும் இல்லாதவாறு மக்களுக்கு இன்று பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவே நேர்ந்துள்ளது.

எங்களுக்கு தெரியும், சிலருக்கு பதவி பலம் கிடைத்துவிட்டால் அகங்காரம் கூடிவிடும். இன்று விசேட வைத்திய நிபுணர்கள் சாதாரண வேலைக்காரர்களாக மாறியுள்ளார்கள். விசேட வைத்திய நிபுணர்கள் என பெயர் மட்டும் தான் உள்ளது.

மிகவும் மன வேதனைக்கு நாட்டு மக்கள் உள்ளாகியுள்ளார்கள். பௌத்த தர்மத்தின் போதனையில் ஒரு விடயம் உள்ளது "நீ செய்து கொண்டதை நீயே அனுபவி" என்று சொல்லப்படுகின்றது, இன்று எமக்கும் அந்த நிலைமை தான் வந்துள்ளது.

வேறு ஒன்றும் இல்லை. மஹிந்த ராஜபக்சவுக்கு என்ன சொன்னோம், மக்களின் அபிமானம் வென்ற முப்படைகளின் தளபதி என போற்றப்பட்டார், ஆனால் மஹிந்த ராஜபக்ச அவர்களே இன்னும் சில நாட்களில் நீங்கள் மக்கள் மனங்களில் இருந்து முற்றாக அகற்றப்படுவீர்கள்.

நீங்கள் இப்படியே இருந்தால் அது நிச்சயம் நடக்கும். நீங்கள் மட்டும் அல்ல எதிர்காலத்தில் ராஜபக்ச குடும்பத்தில் அனைவருக்கும் எதிர்காலமே இல்லாமல் போகும் ஒரு நிலை வரும் என்பது எமக்கு நன்றாக தெரிகிறது.

எங்களுடைய அடுத்தகட்ட நடவடிக்கையாக மக்களையும் இணைத்து கொண்டு இப்பொழுது பொறுத்தது போதும் என, இனியும் பார்த்துக்கொண்டு இருக்காமல் நாட்டிற்கு உகந்த மக்களுக்கான திட்டங்களை ஆரம்பிக்க உள்ளோம். விசேட வைத்திய நிபுணர்கள் நாட்டை முடக்க சொல்கின்றர்கள்.

நாங்களும் அதையே தான் சொல்கின்றோம், நாட்டை மூடுங்கள், நாட்டு மக்களுக்கு உணவை கொடுத்து, தடுப்பூசிகளை சரியாக வழங்கி இந்த நாட்டை வழிநடத்த முடியும். ஆனால் அது எதனையும் இவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.

சுத்தியுள்ள கள்வர்களும், திருடர்களும், சொல்வதை கேட்டு தான் வேலை செய்கின்றார்கள். இதனால் இந்த நாட்டில் அனைவரும் தற்பொழுது வெறுப்படைந்துள்ளார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...