Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

அரசியலில் பிரவேசிப்பது தொடர்பில் எனக்கு எவ்வித விருப்பமும் இல்லை! விமுக்தி குமாரதுங்க

T

The Leader Desk

ஆகஸ்ட் 11, 2021 • 11:09 AM

அரசியலில் பிரவேசிப்பது தொடர்பில் எனக்கு எவ்வித விருப்பமும் இல்லை! விமுக்தி குமாரதுங்க

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிரபல அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரது மகன் அரசியலில் பிரவேசிக்க இருப்பதாக கடந்த தினங்களில் ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது.
  • கடந்த 21 வருடங்களாக ஐக்கிய இராச்சியத்தில் ஒரு கால்நடை வைத்தியராகவும் கால்நடை கண் மருத்துவத் துறையில் விஷேட நிபுணத்துவ பயிற்சியிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறேன்.
  • எனது தனிப்பட்ட இயலுமையினால் எனது தாய் நாட்டிற்கு மேற்கொள்ளவேண்டிய பணிகள் பற்றி, அத்துறையில் முன்னோடியாக இருப்பது பற்றி நான் சிந்திக்கின்றேன்.
  • வைத்தியர் விமுக்தி குமாரதுங்க 11.08.2021.
எழுத்து அளவு:

பிரபல அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரது மகன் அரசியலில் பிரவேசிக்க இருப்பதாக கடந்த தினங்களில் ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது. இந்த செய்திக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.இச் செய்தியில் உண்மை இல்லை என்பதை இங்கே உறுதியாக அறிவிக்க விரும்புகிறேன்.

கடந்த 21 வருடங்களாக ஐக்கிய இராச்சியத்தில் ஒரு கால்நடை வைத்தியராகவும் கால்நடை கண் மருத்துவத் துறையில் விஷேட நிபுணத்துவ பயிற்சியிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறேன்.

நான் பிறந்த எனது தாய் நாட்டை  நேசிக்கிறேன். எனது தனிப்பட்ட இயலுமையினால் எனது தாய் நாட்டிற்கு மேற்கொள்ளவேண்டிய பணிகள் பற்றி, அத்துறையில் முன்னோடியாக இருப்பது பற்றி நான் சிந்திக்கின்றேன். இருப்பினும் இலங்கையின் அரசியலில் பிரவேசிப்பது தொடர்பில் எனக்கு எவ்வித விருப்பமும் இல்லை என்பதை இங்கே தெளிவாக பதிவு செய்ய விரும்புகிறேன்.

கௌரவமான, தனிப்பட்ட ஒரு வாழ்க்கையை நடத்திச் செல்லவே இதுவரை நான் முயன்றுள்ளேன். எனவே அந்த கௌரவத்தை பாதுகாத்துத் தருமாறு இலங்கை ஊடகங்களிடமும் மக்களிடமும் அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.

வைத்தியர் விமுக்தி குமாரதுங்க

11.08.2021

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...