Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

பொலிஸ் வேட்டைக்கு எதிராக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு கடிதம்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 11, 2021 • 6:23 AM

பொலிஸ் வேட்டைக்கு எதிராக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு கடிதம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கல்வி இராணுவமயமாக்கலுக்கு எதிராக குரல் எழுப்பிய தொழிற்சங்கத் தலைவரை பொய்யான குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாட்டின் மிகப் பழமையான தொழிற்சங்கம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு கடிதம் அனுப்பி எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
எழுத்து அளவு:

இலவச கல்வி மற்றும் ஆசிரியர்கள், அதிபர்களின் உரிமைகளை பாதுகாக்கும் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டுவரும், இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின்  சதுர சமரசிங்கவை கைது செய்வதற்கு எடுக்கப்படும் முயற்சிக்கு எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு தந்தி அனுப்பி எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின்  பிரதம செயலாளர் ரொபர்ட் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ஓகஸ்ட் 11ஆம் திகதி தந்தி அனுப்பி எதிர்ப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதோடு, நாடளாவிய ரீதியில் உள்ள தோட்டங்களில் உள்ள சங்கத்தின் உறுப்பினர்களால் அமைச்சருக்கு தந்தி அனுப்பி, சங்கத்தின் தலைவர் சத்துர சமரசிங்கவை பொய் குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யும் முயற்சியை நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.

பொலிசாரின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிரான முதல் தொழிற்சங்க நடவடிக்கை இதுவெனவும், அந்த குரலுக்கு செவிசாய்க்காமல் தொழிற்சங்கத் தலைவரை பொலிஸார் தொடர்ந்து பின்தொடர்ந்தால், மிகவும் கடுமையான  நடவடிக்கைகளை எடுக்க தமது சங்கம் அணிதிரளும் என இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின்  பிரதம செயலாளர் ரொபர்ட் பிரான்சிஸ் எச்சரித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பொலிஸ் வேட்டைக்கு எதிராக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு கடிதம்! | Tamil Leader | We Lead the Nation