Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: குற்றமற்ற சந்தேகநபர்களின் விடுதலைக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பு!

T

The Leader Desk

ஆகஸ்ட் 11, 2021 • 6:17 AM

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: குற்றமற்ற சந்தேகநபர்களின் விடுதலைக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரை நீதிமன்றம் விடுதலை செய்தமைக்கு தமது கண்டனத்தை தெரிவிப்பதாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி வார இறுதி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளது.
  • கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் அஹ்மத் அலாவுதீனின் தந்தை அலாவுதீன் அஹமட் முயாத், கொழும்பு பிரதம நீதவான் புத்திக சி ராகலவினால் கடந்த 6ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டார்.
  • ஏப்ரல் 21, 2019 அன்று பல தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களில் 250ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
எழுத்து அளவு:

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரை நீதிமன்றம் விடுதலை செய்தமைக்கு தமது கண்டனத்தை தெரிவிப்பதாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி வார இறுதி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளது.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் அஹ்மத் அலாவுதீனின் தந்தை அலாவுதீன் அஹமட் முயாத், கொழும்பு பிரதம நீதவான் புத்திக சி ராகலவினால் கடந்த 6ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டார்.

அலாவுதீனுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய போதிய சாட்சிகள் இல்லாமையால், அவர் மீது இனி வழக்குத் தொடர முடியாது என்று சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்ததைத் தொடர்ந்து அலாவுதீன் விடுதலை செய்யப்பட்டார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு சந்தேகநபர்கள் தற்போதைய அரசால் விடுவிக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உதவிச் செயலாளர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

"ஏப்ரல் 21, 2019 அன்று சினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதலை நடத்திய மொஹமட் இப்ராகிம் இன்ஷாப் அஹமட்டுக்கு சொந்தமான வெல்லம்பிட்டிய செப்பு தொழிற்சாலையின் அனைத்து ஊழியர்களும் முன்னர் விடுவிக்கப்பட்டனர்" என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

ஒன்றரை வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பத்து சந்தேகநபர்கள், அவர்களுக்கு எதிராக மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என்ற சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு விடுத்த கோரிக்கையை அடுத்து , கொழும்பு மேலதிக நீதவான் ராஜிந்த்ர ஜயசூரியவினால் விடுவிக்கப்பட்டனர்.

ஏப்ரல் 21, 2019 அன்று பல தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களில் 250ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இதுத் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் அமெரிக்கா மூன்று இலங்கையர்கள் மீது  குற்றம் சாட்டியுள்ளதோடு, பயங்கரவாத சட்டங்களை பயன்படுத்தி இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கானவர்களுக்கு எதிராக இதுவரை வழக்கு தொடரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: குற்றமற்ற சந்தேகநபர்களின் விடுதலைக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பு! | Tamil Leader | We Lead the Nation