Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

அமைச்சரவை மாற்றம் சுகாதார அமைச்சிலும் மாற்றங்கள் !!

T

The Leader Desk

ஆகஸ்ட் 10, 2021 • 1:36 PM

அமைச்சரவை மாற்றம் சுகாதார அமைச்சிலும் மாற்றங்கள் !!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அமைச்சரவை மாற்றத்தின் படி, பேராசிரியர் ஜி.எல்.
  • ஜனாதிபதி கலந்து கொள்ளும் எந்த சந்திப்பிற்கு முன்பும் சுகாதார அதிகாரிகள் குழு பங்குபற்றும் நபர்களுக்கு கொவிட் ஆன்டிஜென் சோதனையை நடத்தும்.
  • சரத் ​​வீரசேகர மாற்றியமைக்கப்படுவார் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், நேற்று நடைபெற உள்ள பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
எழுத்து அளவு:

அமைச்சரவை மாற்றத்தின் படி, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் வெளிநாட்டு அமைச்சராகவும்,தினேஸ் குணவர்தன உயர்கல்வி அமைச்சராகவும்,பிரசன்ன ரணதுங்க கல்வி அமைச்சராகவும்,பவித்ரா வன்னியாராச்சி மின்வலுத்துரை அமைச்சராகவும் வைத்தியர் ரமேஸ் பத்திரன சுகாதார அமைச்சராகவும,ஹெகலிய ரம்புக்வெல்ல கைத்தொழில் அமைச்சராகவும்,டலஸ் அலகப்பெரும ஊடகத்துரை அமைச்சராகவும் நியமிக்கப்படவிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுற்றுலாத்துரை அமைச்சு பற்றி இங்கு குறிப்பிடப்படவில்லை.உயர்கல்வி அமைச்சர் பதவிக்கு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், உயர்கல்வி அமைச்சு மொட்டு கட்சிக்கு கொடுக்கப்பட வேண்டும் என்று கட்சியின் பிரபலமான ஒருவரின் அழுத்தம் காரணமாக தினேஷ் குணவர்த்தனவுக்கு கொடுக்கப்படவிருந்த அமைச்சுப்பதவிக்கு சிக்கல் ஏறபட்டுள்ளது.

சரத் ​​வீரசேகர மாற்றியமைக்கப்படுவார் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், நேற்று நடைபெற உள்ள பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

கொவிட் தொற்றுநோய் சூழ்நிலையில் பொதுக் கூட்டங்களைக் கட்டுப்படுத்தும் ஜனாதிபதியின் நிபுணர் குழுவின் ஆலோசனையின் பேரில் இந்த அமைச்சரவை மாற்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜனாதிபதி கலந்து கொள்ளும் எந்த சந்திப்பிற்கு முன்பும் சுகாதார அதிகாரிகள் குழு பங்குபற்றும் நபர்களுக்கு கொவிட் ஆன்டிஜென் சோதனையை நடத்தும். இதன்படி கூட்டத்தில் கலந்துகொள்ளவிருந்த ஐந்து அதிகாரிகள் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதால் ஜனாதிபதி சந்திப்பிற்கு கட்டுப்பாடு விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட ஆதாரங்களின்படி, ஜூம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நேற்று அமைச்சரவைக் கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...