Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

சீனா தைவானை அடுத்து ஜப்பானை மிரட்டும் லூபிட் புயல்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 10, 2021 • 3:31 AM

சீனா தைவானை அடுத்து ஜப்பானை மிரட்டும் லூபிட் புயல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சீனா மற்றும் தைவானில் பெரும் சேதங்களை ஏற்படுத்திய லூபிட் என்கிற சக்தி வாய்ந்த புயல் தற்போது ஜப்பானை மிரட்டி வருகிறது.
  • லூபிட் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 82 கி.மீ.
  • இதனிடையே ஜப்பானின் ஹிரோஷிமா, ஷிமனே மற்றும் எஹிம் ஆகிய 3 பிராந்தியங்களிலும் லூபிட் புயலின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
  • எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கூறிய 3 பிராந்தியங்களில் இருந்து 3 லட்சத்துக்கும் அதிகமான மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

சீனா மற்றும் தைவானில் பெரும் சேதங்களை ஏற்படுத்திய லூபிட் என்கிற சக்தி வாய்ந்த புயல் தற்போது ஜப்பானை மிரட்டி வருகிறது. இந்த புயல் ஜப்பானின் தெற்கு மற்றும் தென் மேற்கு பிராந்தியங்களை கடுமையாக தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

லூபிட் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 82 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் எனவும், கடல் மிகவும் கொந்தளிப்புடன் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே ஜப்பானின் ஹிரோஷிமா, ஷிமனே மற்றும் எஹிம் ஆகிய 3 பிராந்தியங்களிலும் லூபிட் புயலின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

புயல் காரணமாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் நிகழும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கூறிய 3 பிராந்தியங்களில் இருந்து 3 லட்சத்துக்கும் அதிகமான மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே லூபிட் புயல் அச்சுறுத்தல் காரணமாக ஜப்பானின் தெற்கு மற்றும் தென் மேற்கு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சீனா தைவானை அடுத்து ஜப்பானை மிரட்டும் லூபிட் புயல்! | Tamil Leader | We Lead the Nation