Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

போராடும் தலைவர்களை வேட்டையாடும் முயற்சி குறித்து எச்சரிக்கை!

T

The Leader Desk

ஆகஸ்ட் 10, 2021 • 3:13 AM

போராடும் தலைவர்களை வேட்டையாடும் முயற்சி குறித்து எச்சரிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஓகஸ்ட் 3ஆம் திகதி நாாடாளுமன்றத்திற்கு அருகில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட பல தலைவர்கள் ஏற்கனவே சட்டவிரோதமாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொது சொத்து மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.
  • "அவரது வீட்டுக்கு வருகைதந்து வீட்டில் இருப்பவர்களை அச்சுறுத்துவதோடு, பணியபாற்றும் இடங்களைக் கண்டறிய பொலிஸ் உளவாளிகள் அனுப்பப்படுகின்றார்கள“ என கடந்த 3ஆம் திகதி பேரணியில் உரையாற்றிய சதுர சமரசிங்க தெரிவித்துள்ளார்.
  • நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பல்கலைக்கழக அமைப்பை ஒழுங்குபடுத்தும் பல்கலைக்கழகங்கள் சட்டம் 1978 எண் 16 ஐ இரத்து செய்து, அரசாங்கம் கொத்தலாவல பல்கலைக்கழக சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முயற்சிக்கிறது.
எழுத்து அளவு:

ஓகஸ்ட் 3ஆம் திகதி நாாடாளுமன்றத்திற்கு அருகில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட பல தலைவர்கள் ஏற்கனவே சட்டவிரோதமாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொது சொத்து மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.

"தொழிலாளர் போராட்ட  நிலையத்தின் சமீர கொஸ்வத்த, கோஷிலா, அனைத்துப் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று திரும்பிக்கொண்டிருந்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே, ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் அமில சந்தீப ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்."

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே, ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் அமில சந்தீப ஆகியோர் ஓகஸ்ட் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சிவில் உடையில் வந்த குழு மற்றும் ஒரு சீருடை அணிந்த  அதிகாரி ஆகியோர் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வசந்த முதிலிகே கைவிலங்கு மாட்டி அழைத்துச் சென்றதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. கடத்தப்பட்டு ஒரு நாள் காணாமல் போன அமில சந்தீப காவலில் இருப்பதை பொலிஸார் பின்னர் வெளிப்படுத்தினர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரான அமிந்த லக்மல் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, தங்காளை பொலிஸ் என அறிமுகப்படுத்திய ஒரு குழு அவரை கடத்த முயன்றுள்ளதோடு, மாணவர்கள் உள்ளிட்டவர்களின் எதிர்ப்பினை அடுத்து தடுக்கப்பட்டதாக, சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

பொலிஸ் உளவாளிகள்

100 வருடங்களுக்கு மேல் புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட இலங்கை தோட்ட  சேவையாளர் சங்கத்தின் தலைவரும் பொது சொத்து மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் தலைவரும் இணை ஏற்பாட்டாளருமான சத்துர சமரசிங்கவிற்கும் பொலிஸாரின் காவல்துறை ஒடுக்குமுறை இடம்பெற்று வருவதாக, பொது சொத்து மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

fdrbvb

தொழிற்சங்கத் தலைவரை பொலிஸ் உளவாளிகள் பின்தொடர்வதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

"அவரது வீட்டுக்கு வருகைதந்து வீட்டில் இருப்பவர்களை அச்சுறுத்துவதோடு, பணியபாற்றும்  இடங்களைக் கண்டறிய பொலிஸ் உளவாளிகள் அனுப்பப்படுகின்றார்கள“ என கடந்த 3ஆம் திகதி பேரணியில் உரையாற்றிய சதுர சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு பதிலாக, போராட்டக்காரர்களை கைது செய்து நாட்டு சிறுவர்களின் முழு கல்வியையும் அழிக்க முயல்வதாக, பொது உடைமை மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் குற்றம் சாட்டுகிறது.

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பல்கலைக்கழக அமைப்பை ஒழுங்குபடுத்தும் பல்கலைக்கழகங்கள் சட்டம் 1978 எண் 16 ஐ இரத்து செய்து, அரசாங்கம் கொத்தலாவல பல்கலைக்கழக சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முயற்சிக்கிறது.

தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள், கலைஞர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உட்பட பொதுமக்கள் ஏற்கனவே அரசாங்கத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையாக போராடி வருகின்றனர், கல்வியை இராணுவமயமாக்கும் முயற்சி உட்பட தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் உட்பட பலரை கைது செய்ய  அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, பொதுச் சொத்து மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்கத்தின் இந்த செயல்முறை கருத்து சுதந்திரத்திற்கான ஜனநாயக உரிமைகளுக்கு விழுந்த ஒரு அபாயகரமான அடி எனவும், கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் போராட்டங்களில் ஈடுபடும் மக்கள் மீதான அரசாங்கத்தின் அடக்குமுறையை தனது அமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

போராட்டங்களை ஒடுக்குவதற்கான அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், உச்சபட்ச நடவடிக்கை எடுக்கவும், கீழே குறிப்பிடப்பட்டுள்ள அமைப்புகளை உள்ளடக்கிய பொது சொத்து மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையம், நிபந்தனையின்றி   தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்ததுள்ளது.

இலங்கை வங்கி ஊழியர் சங்கம் (CBEU), இலங்கை வர்த்தகம் மற்றும் தொழில் மற்றும் பொது தொழிலாளர் சங்கம் (CMU), ஊடக தொழிலாளர் தொழிற்சங்க கூட்டமைப்பு (FMETU), இலங்கை தோட்ட சேவையாளர்  சங்கம் (CESUD), ஐக்கிய தொழிலாளர் கூட்டமைப்பு (UFL), தபால் மற்றும் தொலை தொடர்பு அதிகாரிகள் தொழிற்சங்கம் (UPTO), இலங்கை தொழில்முறை ஊடகவியலாளர் சங்கம் (SLWJU), ஐக்கிய பொது சேவைகள் சங்கம் (CCMU), வணிக மற்றும் தொழில்துறை தொழிலாளர் சங்கம் (CIWU), காப்புறு தொழிலாளர் சங்கம் (IEU), தகவல் மற்றும் தொலை தொடர்பு அனைத்து ஊழியர் சங்கம் (AEUIT), இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU), ரயில்வே தர தொழிற்சங்கக் கூட்டமைப்பு (RPTUA), தொலைத்தொடர்பு பொறியியல் டிப்ளோமோதாரிகள் சங்கம் (TEDA), உணவு, பானம் மற்றும் புகையிலைத் தொழிலாளர் சங்கம் (FBTIE), சுயாதீன தடாகத் தொழிலாளர் சங்கம் (IDWU), தேசிய சுதந்திர தொழிற்சங்கம், அச்சக ஊழியர்கள் சங்கம், இலங்கை பெருந்தோட்ட சேவையாளர் சங்கம் (CPSU), நிலம் மற்றும் விவசாய சீர்திருத்த இயக்கம் (MONLAR) மற்றும் PROTECT ஆகியன பொது சொத்து மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்துடன் தொடர்புடைய தொழிற்சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

போராடும் தலைவர்களை வேட்டையாடும் முயற்சி குறித்து எச்சரிக்கை! | Tamil Leader | We Lead the Nation