Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

ரிஷாத்தின் மனைவியின் தடுப்புக்காவல் மேலும் நீடிப்பு! ஊடகங்களில் தகவல் எப்படி வெளியிடப்பட்டது

T

The Leader Desk

ஆகஸ்ட் 9, 2021 • 5:02 PM

ரிஷாத்தின் மனைவியின் தடுப்புக்காவல் மேலும் நீடிப்பு! ஊடகங்களில் தகவல் எப்படி வெளியிடப்பட்டது

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மனைவி உட்பட நான்கு பேரின் பினை மனுவை கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜெயசூர்ய நிராகரித்து, அவர்களை இம்மாதம் 23 ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
  • பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது உயிரிழந்த இசாலினியின் மரணம் சமூகத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
  • அதன்படி, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மனைவி, அவரது தந்தை, அவரது சகோதரர் மற்றும் சிறுமியை அழைத்து வந்து ஒப்படைத்த தரகர் உள்ளிட்டோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
எழுத்து அளவு:

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மனைவி உட்பட நான்கு பேரின் பினை மனுவை கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜெயசூர்ய நிராகரித்து, அவர்களை இம்மாதம் 23 ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

அதன்படி, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மனைவி, அவரது தந்தை, அவரது சகோதரர் மற்றும் சிறுமியை அழைத்து வந்து ஒப்படைத்த தரகர் உள்ளிட்டோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சட்டமா அதிபர் சார்பாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப்ப பீரிஸ் விடுத்த கோரிக்கையை கருத்தில் கொண்டு நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இந்த சம்பவம் தொடர்பான முக்கிய உண்மைகள் நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிப்பதற்கு முன்பு ஊடகங்களில் எப்படி வெளியிடப்பட்டது என்பது குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

மற்றொரு வீடியோ!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது உயிரிழந்த இசாலினியின் மரணம் சமூகத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இசாலினி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போது இசாலினியின் தாயார் மற்றும் ரிஷாத் பதியுதீனின் மனைவியின் நட்பு உரையாடலின் வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இஷாலினி அவரின் வயதை விடவும் தோற்றமுடையவர் என்று அந்த வீடியோவில் அவரது தாயாரால் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், சில அரசியல்வாதிகள் இப்போது இஷாலினியின் தாயாரை அரசியல் நோக்கங்களுக்காக கையாள்வதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...