Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

மன்னாரில் இரட்டை மாட்டு வண்டி சவாரி போட்டி!

T

The Leader Desk

ஆகஸ்ட் 9, 2021 • 10:28 AM

மன்னாரில் இரட்டை மாட்டு வண்டி சவாரி போட்டி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மன்னார் மாவட்ட இரட்டை மாட்டு வண்டி சவாரி சங்கத்தின் ஏற்பாட்டில் சனிக்கிழமை(7) மாலை 4 மணியளவில் மன்னார் முருங்கன் வாழ்க்கை பெற்றான் கண்டல் இரட்டை மாட்டு வண்டி சவாரி திடலில் இடம் பெற்றது.
  • இதன்போது மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 40 ஜோடி காளைகள் குறித்த போட்டியில் பங்குபற்றியன.
  • இதன்போது ' A 'பிரிவில் 1 ஆம் இடத்தை உயிலங்குளத்தை சேர்ந்த பிரின்சியன் ,2 ஆம் இடத்தை காத்தான் குளத்தைச் சேர்ந்த தங்கராசா,3 ஆம் இடத்தை வாழ்க்கை பெற்றான் கண்டலைச் சேர்ந்த சிந்தாத்துரை ஆகியோரது காளைகள் வெற்றி பெற்றுள்ளன.
  • 'B' பிரிவில் 1 ஆம் இடத்தை நொச்சிக்குளத்தை சேர்ந்த செல்வக்குமார்,2 ஆம் இடத்தை உயிலங்குளத்தைச் சேர்ந்த பிரின்சியன், 3 ஆம் இடத்தை சிறுகண்டலைச் சேர்ந்த கென்றிகா ஆகியோரது காளைகள் வெற்றி பெற்றுள்ளன.
எழுத்து அளவு:

மன்னார் மாவட்ட இரட்டை மாட்டு வண்டி சவாரி சங்கத்தின் ஏற்பாட்டில் சனிக்கிழமை(7) மாலை 4 மணியளவில் மன்னார் முருங்கன் வாழ்க்கை பெற்றான் கண்டல் இரட்டை மாட்டு வண்டி சவாரி திடலில் இடம் பெற்றது.

இதன்போது மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 40 ஜோடி காளைகள் குறித்த போட்டியில் பங்குபற்றியன.

இரட்டை மாட்டு வண்டி சவாரி போட்டியானது 'A, B, C, D, E' ஆகிய 5 பிரிவுகளில் நடைபெற்றது.

இதன்போது ' A 'பிரிவில் 1 ஆம் இடத்தை உயிலங்குளத்தை சேர்ந்த பிரின்சியன் ,2 ஆம் இடத்தை காத்தான் குளத்தைச் சேர்ந்த தங்கராசா,3 ஆம் இடத்தை வாழ்க்கை பெற்றான் கண்டலைச் சேர்ந்த சிந்தாத்துரை ஆகியோரது காளைகள் வெற்றி பெற்றுள்ளன.

'B' பிரிவில் 1 ஆம் இடத்தை நொச்சிக்குளத்தை சேர்ந்த செல்வக்குமார்,2 ஆம் இடத்தை உயிலங்குளத்தைச் சேர்ந்த பிரின்சியன், 3 ஆம் இடத்தை சிறுகண்டலைச் சேர்ந்த கென்றிகா ஆகியோரது காளைகள் வெற்றி பெற்றுள்ளன.

'C' பிரிவில் 1 ஆம் இடத்தை பூவரசன் குளத்தைச் சேர்ந்த நியாஸ், 2 ஆம் இடத்தை பிடாரி குளத்தைச் சேர்ந்த நியூரன்,3 ஆம் இடத்தை பிச்சை குளத்தைச் சேர்ந்த விஜயன் ஆகியோர்களின் காளைகள் வெற்றி பெற்றுள்ளன.

'D' பிரிவில் 1 ஆம் இடத்தை சிறுகண்டலை சேர்ந்த கென்றிகா,2 ஆம் இடம் மணற் குளத்தைச் சேர்ந்த செபஸ்தியாம்பிள்ளை,3 ஆம் இடத்தை உயிர்த்தராசன் குளத்தை சேர்ந்த அஜந்தன் ஆகியோர்களின் காளைகள் வெற்றி பெற்றுள்ளன.

'E' பிரிவில் 1 ஆம் இடத்தை நானாட்டானை சேர்ந்த குகன், 2 ஆம் இடத்தை பிச்சை குளத்தைச் சேர்ந்த ரூபராஜ்,3 ஆம் இடத்தை வட்டக்கண்டலைச் சேர்ந்த அஜித்குமார் ஆகியோரது காளைகளும் வெற்றி பெற்றுள்ளன.

வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் இடம்பெறும் இரட்டை மாட்டு வண்டி சவாரி போட்டிக்கு வட மாகாணத்தில் உள்ள ஏனைய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த காளைகளும் போட்டியில் பங்கு கொள்வது வழமை. எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த போட்டியாளர்கள் அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...