Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

பாணி தயாரித்த தம்மிக்கவுக்கு தடுப்பூசி! “இவ்வருடத்துக்கான சிறந்த படம்”

T

The Leader Desk

ஆகஸ்ட் 9, 2021 • 7:25 AM

பாணி தயாரித்த தம்மிக்கவுக்கு தடுப்பூசி! “இவ்வருடத்துக்கான சிறந்த படம்”

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கேகாலையைச் சேர்ந்த நாட்டு மருத்துவரான தம்மிக்க பண்டார, தனது கனவில் வந்த காளியம்மனே, இந்த பாணி மருந்தை தயாரிக்குமாறு கூறியதாக தெரிவித்திருந்தார்.
  • “தம்மிக்க பாணி கொத்தணி” உருவாகிவிடுமோ என்றோர் அச்சமும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
  • தம்மிக்க பண்டார தயாரித்த இந்தப் பாணத்தை, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன ஆகியோரும், ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் பருகியிருந்தனர்.
எழுத்து அளவு:

கேகாலையைச் சேர்ந்த நாட்டு மருத்துவரான தம்மிக்க பண்டார, தனது கனவில் வந்த காளியம்மனே, இந்த பாணி மருந்தை தயாரிக்குமாறு கூறியதாக தெரிவித்திருந்தார்.

தம்மிக்க பண்டார தயாரித்த இந்தப் பாணத்தை, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன ஆகியோரும், ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் பருகியிருந்தனர்.

தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதற்கு முன்னரே இந்தப் பாணியை அவர்கள் பருகியிருந்தனர். எனினும், அவர்களில் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தம்மிக்க பண்டாரவின் பாணியை பெற்றுக் கொள்வதற்காக அவரின் வீட்டுக்கு முன்பாக பல்லாயிரக் கணக்கானோர் ஒரே நேரத்தில் ஒன்றுகூடினர். இதனால். “தம்மிக்க பாணி கொத்தணி” உருவாகிவிடுமோ என்றோர் அச்சமும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தனது வீட்டின் முன்பாக குழுமியிருந்தவர்களுக்கு தம்மிக்க பண்டார, கால் போத்தல்களில் அடைத்த பாணியை இலவசமாக விநியோகித்தார்.

இந்த நிலையில், தம்மிக்க பண்டாரவின் தயாரிப்புக்கு மருத்துவ பானமாக அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளபோதும், கொரோனா எதிர்ப்பு மருந்தாக அங்கிகாரம் வழங்கப்படவில்லை என, ஆயுர்வேத ஆணையாளர் தெரிவித்திருந்தார்.

இது இவ்வாறிருக்க, தம்மிக்க பண்டார, கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொண்ட படமும் சமூக வலைத்தளத்தளங்களில் தற்போது வைரலாகியுள்ளது. இப்படத்துக்கு கீழே, “இவ்வருடத்துக்கான சிறந்த படம்” என பலரும் கருத்துக்களை பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...