Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

பார்சிலோனா கால்பந்து கிளப்பில் இருந்து லயோனல் மெஸ்ஸி கண்ணீரோடு வெளியேறினார்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 8, 2021 • 1:46 PM

பார்சிலோனா கால்பந்து கிளப்பில் இருந்து லயோனல் மெஸ்ஸி கண்ணீரோடு வெளியேறினார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பார்சிலோனா கிளப் அணியில் தொடர்வதற்கு தன்னால் ஆன அனைத்தையும் செய்ததாக ஸ்பெயின் நாட்டின், பார்சிலோனா நகரின் கேம்ப் நௌ ஸ்டேடியத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
  • ஆனால், அவர் பார்சிலோனாவின் எதிராளி அணியான பி.எஸ்.ஜி.
  • நிதி நெருக்கடியில் தள்ளாடிவரும் பார்சினோனா கிளப், தங்கள் அணி வீரர்களுக்கான சம்பள உச்சவரப்பை வெகுவாகக் குறைத்துவிட்டது.
எழுத்து அளவு:

பார்சிலோனா கிளப் அணியில் தொடர்வதற்கு தன்னால் ஆன அனைத்தையும் செய்ததாக ஸ்பெயின் நாட்டின், பார்சிலோனா நகரின் கேம்ப் நௌ ஸ்டேடியத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

நிதி நெருக்கடியில் தள்ளாடிவரும் பார்சினோனா கிளப், தங்கள் அணி வீரர்களுக்கான சம்பள உச்சவரப்பை வெகுவாகக் குறைத்துவிட்டது. அதற்கு உட்பட்டு மெஸ்ஸியுடன் புதிய ஒப்பந்தத்தை போட முடியவில்லை என்பதால் அவரை தக்கவைத்துக்கொள்ள முடியாது என்று அந்த கிளப் நிர்வாகம் வியாழக்கிழமை அறிவித்தது.

ஞாயிற்றுக்கிழமை நடந்த பிரிவுபசார நிகழ்வில் அவர் கண்ணீரோடு பேசியபோது அவரது குடும்பத்தினர், நண்பர்கள் சிலர் அங்கே இருந்தனர்.

ஏன் அவர் பார்சிலோனா கிளப்பிலேயே இருக்கக்கூடாது என்று கேட்கப்பட்டபோது, கிளப் பெரிய கடனில் சிக்கியிருப்பதாக தலைவர் தெரிவித்தார். எனவே தொடர்ந்து அங்கேயே இருந்து சம்பளம் வாங்குவது சிக்கலை அதிகரிக்கும். எனவே அது சாத்தியமில்லை என்று அவர் கூறினார்.

"நான் பார்சிலோனா அணியை விட்டு விலகவேண்டும் என்று சொல்லப்பட்டபோது என் ரத்தமே குளிரில் உறைந்தது போலிருந்தது. அதை ஏற்றுக்கொள்வது இப்போதுவரை கடினமாக இருக்கிறது. வீட்டுக்குப் போனபிறகும் நான் மோசமாகவே உணர்வேன்" என்றார் மெஸ்ஸி.

கால்பந்து ஜாம்பவான் பீலேவின் சாதனையைச் சமன் செய்தார் மெஸ்ஸி

முன்னணி கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு தடை விதிப்பு

தமது வாழ்வின் மிகக் கடினமான கட்டம் இது என்று கூறிய அவர், புதிய அத்தியாயம் இனி தொடங்கும் என்றும் கூறினார்.

அடுத்து எங்கே போகிறார்?

லயோனல் மெஸ்ஸி

பார்சிலோனா அணியுடனான மெஸ்ஸியின் வரலாற்று உறவு முடிவுக்கு வருகிற நிலையில் அவர் அடுத்து எந்த அணிக்கு போகப் போகிறார் என்ற கேள்வி ஆர்வத்தோடு எழுப்பப்படுகிறது.

லயோனல் மெஸ்ஸி

செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து அவர் நேரடியாக எதையும் கூறவில்லை.

ஆனால், அவர் பார்சிலோனாவின் எதிராளி அணியான பி.எஸ்.ஜி. அணியுடன் இணையப் போவதாக பேச்சுகள் அடிபட்டுக்கொண்டே இருக்கின்றன. இது பற்றி அவரிடம் கேட்டபோது, அதற்கு சாத்தியம் இருப்பதாக கூறினார் மெஸ்ஸி. ஆனால், இதுவரை எவருடனும் ஒப்பந்தம் இறுதியாகவில்லை என்று கூறிய அவர், தமது விலகல் குறித்த செய்தி வெளியானதில் இருந்து பலர் தம்மை தொடர்புகொண்டு பேசியிருப்பதாகக் கூறினார்.

மீண்டும் வருவேன்

"நல்லவிதமான காலங்களும் இருந்தன. மோசமான காலங்களும் இருந்தன. ஆனால், ஆட்கள் காட்டிய அன்பு எப்போதும் ஒன்றாகவே இருந்தது. மீண்டும் பார்சிலோனா கிளப்புக்கு எந்த நேரம் வேண்டுமானாலும் திரும்ப வர முடியும் என்று நம்புகிறேன். உலகத்திலேயே இந்த கிளப்தான் சிறந்ததாக திகழ்வதற்கு என்னால் முடிந்த சிலதை இந்த அணிக்கு கொண்டுவர முடியும் என்றும் நம்புகிறேன். பல விஷயங்களை கூற விரும்புகிறேன். ஆனால், இப்போது என்னால் இது மட்டுமே சொல்ல முடிகிறது. வேறு பேசுவதற்கு சொற்கள் வரவில்லை. எல்லோருக்கும் நன்றி" என்று கூறினார் அவர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பார்சிலோனா கால்பந்து கிளப்பில் இருந்து லயோனல் மெஸ்ஸி கண்ணீரோடு வெளியேறினார்! | Tamil Leader | We Lead the Nation