Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

டோக்யோ ஒலிம்பிக்போட்டியில் மகளிர் ஹாக்கியை உச்சத்துக்குக் கொண்டு சென்ற இந்தியப் பெண்கள்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 6, 2021 • 5:20 AM

டோக்யோ ஒலிம்பிக்போட்டியில் மகளிர் ஹாக்கியை உச்சத்துக்குக் கொண்டு சென்ற இந்தியப் பெண்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆட்ட நேர இறுதியில் 4-3 என்ற கோல் கணக்கில் பிரிட்டன் வெற்றி பெற்றது.
  • கடந்த ஜூலை 28ஆம் தேதி நடைபெற்ற குரூப் போட்டியில் கூட பிரிட்டன் 4-க்கு 1 என்கிற கோல் கணக்கில் இந்தியாவை வெற்றி கொண்டது இங்கு நினைவுகூரத்தக்கது.
  • ஆம் ஆண்டு முதல் இந்திய பெண்கள் ஹாக்கி அணி, டோக்யோ உட்பட மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் தான் விளையாடியுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
  • அவர் தலைமையின் கீழ் தான் 36 ஆண்டுகளில் முதல் முறையாக 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி கலந்து கொள்ள தகுதி பெற்றது.
எழுத்து அளவு:

ஆட்ட நேர இறுதியில் 4-3 என்ற கோல் கணக்கில் பிரிட்டன் வெற்றி பெற்றது.

இந்திய பெண்கள் ஹாக்கி அணி வரலாற்றிலேயே முதல் முறையாக, டோக்யோ லிம்பிக் போட்டிகளில் அரை இறுதிப் போட்டி வரை முன்னேறியது. கடைசி வரை போராடியும் அர்ஜென்டினா உடனான அரை இறுதியில் தோல்வியைத் தழுவியது.

கடந்த ஜூலை 28ஆம் தேதி நடைபெற்ற குரூப் போட்டியில் கூட பிரிட்டன் 4-க்கு 1 என்கிற கோல் கணக்கில் இந்தியாவை வெற்றி கொண்டது இங்கு நினைவுகூரத்தக்கது.

இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் இந்த பயணம் அத்தனை எளிதாக இல்லை. பெண்கள் மீதான பாலியல் ரீதியிலான விமர்சனங்கள், சமத்துவமற்ற ஆணாதிக்கவாத சிந்தனைகள், பொருளாதார சிக்கல்கள், பிற்போக்கான சமூக கட்டுப்பாடுகள் என மிகவும் கரடுமுரடான பாதையாகவே இருந்தது.

ஹாக்கி

ஹாக்கி

"ஹாக்கி விளையாடி என்ன செய்யப் போகிறாள், குட்டையான ஆடைகளை அணிந்து கொண்டு க்ரவுண்டை சுற்றி ஓடி சமூகத்துக்கு கெட்ட பெயர் வாங்கிக் கொடுப்பாள்" என அவரது பெற்றோரிடமோ குறை கூறி விமர்சிக்கப்பட்டவர் தான் இன்று இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் தலைவர் மற்றும் இந்தியாவின் ஃபார்வேர்ட் ராணி ராம்பால்.

பெண்தன்மை குறைவதால் இந்தியாவின் மற்றொரு முக்கிய ஃபார்வேர்ட் வீராங்கனையான வந்தனா கடாரியா ஹாக்கி விளையாட ஊக்குவிக்கப்படவில்லை.

மதுப்பழக்கத்துக்கு அடிமையான தந்தையால் துன்பப்பட்ட நேஹா கோயல் ஹாக்கியில் நிம்மதி கண்டார்.

2015ஆம் ஆண்டு பக்கவாத நோயால் நிஷா வர்ஸியின் தந்தை பாதிக்கப்பட்ட பின், குடும்பத்தின் அத்தியாவசியத் தேவைக்காக ஆலை ஒன்றில் கூலி வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார் அவரது தாயார்.

ஜார்கண்டில் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் வளர்ந்த நிக்கி பிரதான் உடைந்த ஹாக்கி பேட்டை வைத்துக் கொண்டு, கரடு முரடான பரப்பில் ஹாக்கி விளையாடத் தொடங்கினார்.

ஹாககி

ஹாககி

இப்படி இந்திய மகளிர் ஹாக்கி அணியில் விளையாடிய பெண்கள் அனைவரும், ஏற்கனவே பல்வேறு தடைகளைத் தாண்டி வந்துள்ளனர், விமர்சனங்களை மோதி மிதித்து எறிந்துள்ளனர்.

இந்திய பெண்கள் ஹாக்கி அணி, பிரிட்டனுக்கு எதிராக இன்று வெண்கலத்தை வெல்லவில்லை எனினும், அவர்கள் ஓர் அணியாக டோக்யோ ஒலிம்பிக்கில் தொட்ட இந்த உயரம் நிச்சயம் கொண்டாடப்பட வேண்டியவையே.

விளையாட்டு வீரர்களை விமர்சித்தது ஒரு பக்கம் என்றால், இந்திய மகளிர் அணி குருப் ஆட்டங்களைக் கூட தாண்ட மாட்டார்கள் என சில விமர்சனங்கள் எழுந்தன.

தங்களின் ஆணித்தரமான வெற்றிகள் மூலம், அதை உடைத்துக்காட்டினர். காலிறுதியில் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியாவையே தோற்கடித்தது இந்திய மகளிர் ஹாக்கி அணியின் மகத்தான வெற்றிகளில் ஒன்று.

இந்திய பெண்கள் அணி அப்படி ஒரு பிரமதமான திறனோடு, அசாத்திய வேகத்தோடும் விளையாடியது. அது ஓர் அற்புதத் தருணம்.

1980ஆம் ஆண்டு முதல் இந்திய பெண்கள் ஹாக்கி அணி, டோக்யோ உட்பட மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் தான் விளையாடியுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஹாக்கி

ஹாக்கி

இந்திய பெண்கள் ஹாக்கி அணியில் பெரும்பாலான பெண்கள் மிகவும் எளிமையான பின்புலத்திலிருந்து வருகின்றனர். அரசு வேலை, ஒரு நிலையான மாத சம்பளம் வீராங்கனைகளின் கனவுகளை நிறைவு செய்துவிடுவதாக அமைந்துவிடுகின்றன.

2012ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் பெண்கள் ஹாக்கியை மேம்படுத்தும் வகையில் சில பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நீல் ஹாகுட் இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் பயிற்றுநராக நியமிக்கப்பட்டார். அவர் தலைமையின் கீழ் தான் 36 ஆண்டுகளில் முதல் முறையாக 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி கலந்து கொள்ள தகுதி பெற்றது.

ஆனால் பெண்கள் ஹாக்கி அணி ரியோவில் எதிர்பார்த்த அளவுக்கு பெரிதாக சாதிக்கவில்லை. இருப்பினும் இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு ஒரு நல்ல அனுபவமும், நம்பிக்கையும் கிடைத்தது. அணிக்கு தேவையான விஷயங்களை செய்து கொடுத்தால், அவர்களால் சாதிக்க முடியும் என்பதையும் உணர்த்தியது.

தற்போது ஜோர்ட் மரின் (Sjoerd Marijne) என்கிற பயிற்றுநரின் கீழ், இந்திய அணி பெறும் பயிற்சியில் பெரிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. உலக வீராங்கனைகளுக்கு நிகராக தற்போது இந்திய வீராங்கனைகளும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தான் ஹாக்கி விளையாட்டில் அறிவியல் பூர்வமான விஷயங்களால் இந்திய பெண்கள் ஹாக்கி அணி பலன் பெறத் தொடங்கியுள்ளது.

இந்த 16 பேரும் தங்கள் பயணங்களை, தங்களின் தடைகளைத் தாண்டி, ஒரு பொது இலக்கை அடைய வேண்டும் என போராடினர். இந்திய பெண்கள் ஹாக்கியை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இவர்கள் அனைவருமே தங்களின் அணிக்காகவும், தங்களின் போராட்ட குணத்துக்காகவும் நிச்சயம் நினைவுகூரப்பட வேண்டும்.

இந்திய பெண்களின் சார்பாக இறுதி வரை போரட்ட குணத்தோடு விளையாடி பெருமை சேர்த்த, இந்திய மகளிர் ஹாக்கியை அண்ணார்ந்து பார்க்க வைத்த அனைத்து வீராங்கனைகளுக்கும் வாழ்த்துக்கள்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...