Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

காணாமலாக்கப்பட்டவர்கள் பட்டியலில் உலகளவில் இரண்டாவது இடத்தில் இலங்கை! கரன்னகொட குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை கேள்வி

T

The Leader Desk

ஆகஸ்ட் 5, 2021 • 7:07 AM

காணாமலாக்கப்பட்டவர்கள் பட்டியலில் உலகளவில் இரண்டாவது இடத்தில் இலங்கை! கரன்னகொட குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை கேள்வி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட மீது குற்றச்சாட்டுகளை தொடர முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று அறிவித்தது.
  • இந்த நிலையில், இந்த வழக்கு ஏற்கனவே இலங்கை நீதிமன்றங்களில் விதிக்கப்பட்ட தடைகளால் தடைப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், நேற்யை முடிவு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி வழங்குவதில் மேலும் தாமதத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
  • இந்த நிலையில், இந்த விடயம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய – பசுபிக் பிராந்திய பணிப்பாளர் யாமினி மிஸ்ரா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட மீது குற்றச்சாட்டுகளை தொடர முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று அறிவித்தது.

இந்த நிலையில், இந்த விடயம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய – பசுபிக் பிராந்திய பணிப்பாளர் யாமினி மிஸ்ரா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், பல தசாப்தங்களாக பல்லாயிரக்கணக்கான மக்கள் வலுக்கட்டாயமாக காணாமல்போன நிலையில், கட்டாயமாக காணாமலாக்கப்பட்டவர்கள் பட்டியலில் உலகளவில் இரண்டாவது இடத்தில் இலங்கை உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்த வழக்கு ஏற்கனவே இலங்கை நீதிமன்றங்களில் விதிக்கப்பட்ட தடைகளால் தடைப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், நேற்யை முடிவு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி வழங்குவதில் மேலும் தாமதத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சட்டமா அதிபர் திணைக்களம் அதன் முடிவிற்கான காரணங்களை விளக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கை அதிகாரிகள் காணாமல் போன மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உண்மை, நீதி மற்றும் இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...