Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

கொரோனாவை குறைத்து மதிப்பிடாதீர்கள்! களுபோவில வைத்தியசாலையில் இருந்து திலக்ஷனி மதுவந்தி

T

The Leader Desk

ஆகஸ்ட் 5, 2021 • 6:41 AM

கொரோனாவை குறைத்து மதிப்பிடாதீர்கள்! களுபோவில வைத்தியசாலையில் இருந்து திலக்ஷனி மதுவந்தி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்நிலையில் களுபோவில வைத்தியசாலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து தென்னிலைகையை சேர்ந்த திலக்ஷனி மதுவந்தி தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
  • எனினும் வைத்தியசாலையில் ஊழியர்கள் குறைவாகவே உள்ள நிலையிலும், அவர்கள் ஒரு கடவுளை போல கடினமாக நோயாளர்களுடன் போராடுகின்றனர்.
  • இது தொடர்பில் அவர் பதிவிட்டுள்ளதாவது, தனது தாயார் கொரோனா தொற்றுடன் வைத்தியசாலையில் சேர்க்க நீண்ட வரிசையில் இருந்ததாகவும், வரிசையில் காத்திருந்த போது இருவர் கண்முன்னே இறந்துவிட்டதாகவும், சிலர் மயங்கி கீழே விழுந்ததாகவும் அவர் கூறினார்.
எழுத்து அளவு:

இந்நிலையில் களுபோவில வைத்தியசாலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து தென்னிலைகையை சேர்ந்த திலக்ஷனி மதுவந்தி தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

தனது தாயார் கொரோனா தொற்றுடன் வைத்தியசாலையில் சேர்க்க நீண்ட வரிசையில் இருந்ததாகவும், வரிசையில் காத்திருந்த போது இருவர் கண்முன்னே இறந்துவிட்டதாகவும், சிலர் மயங்கி கீழே விழுந்ததாகவும் அவர் கூறினார்.

இந்தியாவைப் பற்றி சொன்ன செய்திகளை இப்போது என் கண்களால் பார்க்கிறேன். களுபோவில வைத்தியசாலையின் கொவிட் வார்ட், வார்டில் ஒரு படுக்கையில் இரண்டு அல்லது மூன்று நோயாளிகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் தீவிர நோய்வாய்ப்பட்டவர்கள் என்றும், வார்டில் உள்ள படுக்கைகளின் கீழ், மற்றவர்கள் உயிருக்கு போராடி, ஒக்ஸிஜனைப் பெறுகிறார்கள் எனவும், அதோடு தரையில் நோயாளிகள் நடக்க பயப்படுகிறார்கள்.

மீதமுள்ள அனைத்து (நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள்) நீண்ட இருக்கைகளிலும் bench, நாற்காலிகள், மரங்களின் கீழ் படுத்திருக்கிறார்கள்.மணல் தரையில் ஒரு போர்வையுடனும் அதுவும் இல்லாமல் படுத்துள்ளதை காணமுடிகின்றது. குளிரிலும் நுளம்பு கடியிலும் , இந்த மக்கள் அனைவரும் கொரோனாவை எதிர்த்துப் போராடுகிறார்கள்.

எனினும் வைத்தியசாலையில் ஊழியர்கள் குறைவாகவே உள்ள நிலையிலும், அவர்கள் ஒரு கடவுளை போல கடினமாக நோயாளர்களுடன் போராடுகின்றனர். என் அம்மா இதுபோன்று கொரோனாவுடன் போராடிக் கொண்டிருந்தபோது, ​​என் தந்தை ஒரு ஒக்ஸிஜன் இயந்திரத்திற்கு காத்திருந்தார்.

இந்த வாழ்க்கையில் பெரிய சந்தோசம் இல்லை. மேலும் உதவியற்ற நிலை. நாளை எனக்கும் தொற்று ஏற்படும். நான் சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்றுதான். கொரோனாவை குறைத்து மதிப்பிடாதீர்கள். உங்களால் முடிந்தவரை கவனமாக இருங்கள்.

குடும்பத்தில் உள்ள அனைவரையும் கவனித்துக் கொள்ளுங்கள் எனவும் திலக்ஷாணி மதுவந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.    

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...