Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

துமிந்த சில்வாவின் பயணங்களுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது!

T

The Leader Desk

ஆகஸ்ட் 5, 2021 • 5:38 AM

துமிந்த சில்வாவின் பயணங்களுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி கஸ்சாலி ஹுசைன் தாக்கல் செய்த இந்த மனுவில் சட்டமா அதிபர் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
  • முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் துமிந்த சில்வா உற்பட 13 பேர் மீது சட்டமா அதிபர் 2016 செப்டம்பர் 08 அன்று கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
  • மரண தண்டனையை எதிர்த்து துமிந்த சில்வா உள்ளிட்ட இருவர் தாக்கல் செய்த மேன்முறையீடுகள் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய குழுவினால் 2018 அக்டோபர் 11 அன்று நிராகரிக்கப்பட்டது மற்றும் கொழும்பு உயர் நீதிமன்றம் அவர்களின் மரண தண்டனையை ஒருமனதாக உறுதி செய்தது.
எழுத்து அளவு:

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி கஸ்சாலி ஹுசைன் தாக்கல் செய்த இந்த மனுவில் சட்டமா அதிபர் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

மனுவில், மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு அரசியலமைப்பின் பிரிவு 34 மற்றும் 34 (1) ன் கீழ் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.மன்னிப்பு வழங்குவதற்கான அதிகாரம் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியிடம் உள்ளது, ஆனால் சட்டத்தரணி,பொது மற்றும் நீதி அமைச்சரின் ஆலோசனையின்றி இந்த அதிகாரத்தை "தன்னிச்சையாக" பயன்படுத்த முடியாது என்று ஜூன் மாதம் ஒரு கடிதத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் தெரிவித்தது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு மன்னிப்பு வழங்குவதில் இந்த நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை என்று மனுதாரர் கஸ்சாலி ஹுசைன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர், சிறைக் கைதிக்கு எந்த அடிப்படையில் மன்னிப்பு வழங்கப்பட்டது என்பதை விளக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார்.

மனுதாரர்கள் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியது சட்டத்திற்கு முரனானது என்றும் அவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறு மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் துமிந்த சில்வா உற்பட 13 பேர் மீது சட்டமா அதிபர் 2016 செப்டம்பர் 08 அன்று கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

விசாரணைக்குப் பிறகு, ஐந்து பிரதிவாதிகளும் கொலை குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மரண தண்டனையை எதிர்த்து துமிந்த சில்வா உள்ளிட்ட இருவர் தாக்கல் செய்த மேன்முறையீடுகள் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய குழுவினால் 2018 அக்டோபர் 11 அன்று நிராகரிக்கப்பட்டது மற்றும் கொழும்பு உயர் நீதிமன்றம் அவர்களின் மரண தண்டனையை ஒருமனதாக உறுதி செய்தது.

தற்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் அவரோடு இணைந்து பணியாற்றிய துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியாகி ஒரு வருடம் கழிந்ததும் மன்னிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

துமிந்த சில்வாவின் பயணங்களுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது! | Tamil Leader | We Lead the Nation