Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

ஜனாதிபதி செயலகம் அருகே நான்கு சுற்றுவட்டத்திலிருந்தும் ஆசிரியர் அதிபர்களின் வாகன அணிவகுப்பு!

T

The Leader Desk

ஆகஸ்ட் 4, 2021 • 1:36 PM

ஜனாதிபதி செயலகம் அருகே நான்கு சுற்றுவட்டத்திலிருந்தும் ஆசிரியர் அதிபர்களின் வாகன அணிவகுப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • போராட்டக்காரர்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்னால் வீதி மறியலில் ஈடுபட்டதால் காலி வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
  • கடவத்த, பன்னிப்பிட்டிய மற்றும் மொரட்டுவையில் ஆரம்பித்த ஆசிரியர் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் ஜனாதிபதி செயலகத்தை அன்மித்துள்ளன.
  • இதேவேளை, மொரட்டுவயில் ஆரம்பிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் வாகன அணிவகுப்புக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்குமாறு மொரட்டுவ பொலிஸார் இன்று (4) மொரட்டுவ மேலதிக நீதவானிடம் கோரிக்கை விடுத்தனர்.
எழுத்து அளவு:

போராட்டக்காரர்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்னால் வீதி மறியலில் ஈடுபட்டதால் காலி வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஆசிரியர் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கங்கள் கடவத்தை, பன்னிப்பிட்டிய, வெலிசர, கண்டி மற்றும் மொரட்டுவயில் தங்களது சம்பள பிரச்சனைக்கு உடனடி தீர்வு கோரி வாகன அணிவகுப்பை தொடங்கின.

நீர்கொழும்பு-கொழும்பு பிரதான வீதியில் வெலிசர நவலோக மைதானத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்ட வாகன அணிவகுப்பு ஜனாதிபதி செயலகத்தை சென்றடைந்துள்ளது.

கடவத்த, பன்னிப்பிட்டிய மற்றும் மொரட்டுவையில் ஆரம்பித்த ஆசிரியர் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் ஜனாதிபதி செயலகத்தை அன்மித்துள்ளன.

இதேவேளை, மொரட்டுவயில் ஆரம்பிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் வாகன அணிவகுப்புக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்குமாறு மொரட்டுவ பொலிஸார் இன்று (4) மொரட்டுவ மேலதிக நீதவானிடம் கோரிக்கை விடுத்தனர்.

எவ்வாறாயினும், மொரட்டுவ மேலதிக நீதவான் உத்தலா சுவஹந்துருகொட தடை உத்தரவை நிராகரித்ததோடு, நாடு முழுவதும் திறந்திருக்கும் தருணத்தில் கொவிட்  தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், அமைதியான போராட்டம் நடத்த அனுமதிக்க முடியும் என்றும் கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...